நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான வெள்ளம்... அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்... தப்புமா நியூசிலாந்து
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ள குட்டி நாடு நியூசிலாந்து. உலகில் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று.
இந்த நாடு தற்போது வெள்ளப் பெருக்கு காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அங்குக் கனமழை பெய்து வருகிறது.

கா்டர்பி மாகாணம்
குறிப்பாக அங்குள்ள கா்டர்பி மாகாணத்தில் கடந்த சில தினங்களாகவே தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறு மற்றும் நீர்ப்பிடி பகுதிகளில் நீர் அளவு அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது. கா்டர்பி மாகாணத்தில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராணுவ ஹெலிகாப்டர்கள்
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துவர ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு நெடுஞ்சாலைகள், பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. கனமழை தொடர்ந்து பெய்து வருவதாகவும் மழை பெய்வது நின்றால் மட்டுமே மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு லட்சம் டாலர் ஒதுக்கீடு
இது குறித்து அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரிஸ் ஃபாஃபோய் கூறுகையில், "இந்த வெள்ளம் காரணமாக எவ்வளவு தூரம் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை முழுவதுமாக அறிந்துகொள்ள இன்னும் சில காலம் ஆகும். சேதம் அதிகமாகவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். கா்டர்பி மாகாணத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ஒரு லட்சம் நியூசிலாந்து டாலர்களை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வானிலை மையம்
அப்பகுதியிலுள்ள பல பாலங்களை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வரும் நாட்களில் நியூசிலாந்தில் மழை மெல்லக் குறையும் என்பே அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications