மொத்த கஜானாவும் காலி.. ரோடு போடுவதற்காக சீனாவிடம் வாங்கிய "சின்ன" கடன்.. நிலைகுலைந்த குட்டி நாடு!
பெய்ஜிங்: சீனாவிடம் சாலை பணிக்காக வாங்கிய கடனால் மாண்டினீக்ரோ என்ற குட்டி நாடு பெரிய கடனில் மூழ்கி உள்ளது. நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பிற்கு இணையாக தற்போது கடன் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு மூழ்கி உள்ளது.
Recommended Video
இத்தாலிக்கு வலது புறமாக அல்பேனியாவிற்கு மேலே செர்பியாவிற்கு கொஞ்சம் கீழே அமைந்து இருக்கும் மிக சிறிய நாடுதான் மாண்டினீக்ரோ. நேட்டோ படைக்குழுவில் ஒரு நாடாக இருக்கும் மாண்டினீக்ரோவில் வெறும் 6.5 லட்சம் மக்கள்தான் வசித்து வருகிறார்கள்.
உலகின் மிக அழகிய சிறிய நாடுகளில் ஒன்றான மாண்டினீக்ரோ தற்போது மிகப்பெரிய அளவில் கடனில் மூழ்கி உள்ளது. காரணம் சீனாவின் சாலை திட்டம் ஒன்று.

மாண்டினீக்ரோ
மாண்டினீக்ரோ நாட்டின் முந்தைய அரசு சீன நிறுவனம் ஒன்றின் உதவியோடு மிகப்பெரிய சாலை திட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அதன்படி சீனாவிடம் கடன் வாங்கி 270 மைல் தூரத்திற்கு பல்வேறு பாலங்கள் அடங்கிய நீண்ட சாலையை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

கடன்
சீனாவின் ஸ்டேட் பேங்க் மூலம் 1 பில்லியன் டாலர் கடன் வாங்கியது மாண்டினீக்ரோ. இந்த கடனை அடைக்க முடியாமல்தான் தற்போது மாண்டினீக்ரோ நாடு விழி பிதுங்கி போய் உள்ளது. சீனாவிற்கு என்னமோ இது சின்ன கடன்தான்.. ஆனால் மாண்டினீக்ரோவிற்கு இது மிகப்பெரிய தொகை. திட்டப்படி இந்த சாலை பணி மாண்டினீக்ரோ போர்ட் பகுதியில் இருந்து செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் வரை கட்டப்பட வேண்டும். 270 மைல் கட்ட வேண்டும் என்றாலும் தற்போது வரை 25 மைல்தான் கட்டப்பட்டுள்ளது.

ஆனால்
27 மைல் சாலைக்கே மாண்டினீக்ரோ நாடு மொத்த கடனில் முக்கால்வாசி தொகையை செலவு செய்துவிட்டதாம். சீன நிறுவனத்திற்கு ஊதியம், ஒப்பந்தம் என்று மொத்தமாக மாண்டினீக்ரோ கடன் வாங்கிய பணத்தில் பெருமளவை செலவு செய்துவிட்டதாம். மீதம் உள்ள பணத்தில் மாண்டினீக்ரோ மூலம் இந்த சாலையை கட்டி முடிக்க முடியாது. மீதமுள்ள தொகையில் சீன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்ற நிலை உள்ளது.

கஜானா
அந்த நாட்டின் மொத்த ஜிடிபியே 530 கோடி டாலர்தான். அவ்வளவு சின்னநாடு அது. ஆனால் மாண்டினீக்ரோ நாடு அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு சீனாவிடம் இருந்து 1 பில்லியன் டாலர் கடன் வாங்கி உள்ளது. அதாவது 100 கோடி டாலர். இது கிட்டத்தட்ட அந்த நாட்டின் ஜிடிபியில் 20%. அதாவது மொத்த ஜிடிபியில் 20% பணத்தை ஒரே சாலையின் செலவிற்காக சீனாவிடம் கடன் வாங்கி உள்ளது மாண்டினீக்ரோ.

முடியாது
தற்போது கஜானாவில் பெரிய அளவில் தொகை இல்லாத நிலையில், சாலை பணியையும் முடிக்காமல் அந்த நாடு கடுமையாக திணறி வருகிறது. இதில் கவலை அளிக்க கூடிய இன்னொரு விஷயம், இந்த மாத இறுதிக்குள் மாண்டினீக்ரோ நாடு முதல் தவணை இஎம்ஐ தொகையை செலுத்த வேண்டும். ஆனால் இன்னும் மாண்டினீக்ரோ நாடு இஎம்ஐ செலுத்த நிதி இன்றி கஷ்டத்தில் உள்ளது.

சாலை
இந்த சாலையும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையில் மக்கள் பெரிய அளவில் பயணம் செய்யப்போவது இல்லை. அப்படி இருந்தும் இப்படி ஒரு சாலைக்கு பல கோடிகளை மாண்டினீக்ரோ செலவு செய்துள்ளது.மாண்டினீக்ரோ நாட்டில் இப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன் பிரதமராக இருந்த துஸ்க்கோ மார்க்கோவிச் எடுத்த இந்த முடிவு காரணமாக அந்த நாடு சிக்கலில் மாட்டியுள்ளது.

சீனா
இந்த நாட்டால் இவ்வளவு பெரிய கடனை கொடுக்க முடியாது என்று தெரிந்தும் சீனா பெரிய தொகையை கடனாக வழங்கி உள்ளது. மாண்டினீக்ரோ இதை எப்படி திருப்பி செலுத்தும் என்று தெரியாத நிலையில் புதிய அரசு குழப்பத்தில் உள்ளது. ஒரே ஒரு சாலை திட்டம் மொத்த நாட்டின் பொருளாதாரத்தை காலியாக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அதிலும் மக்கள் பெரிதாக பயன்படுத்த முடியாத சாலைகளுக்கு இவ்வளவு கோடிகளை மாண்டினீக்ரோ வீணடித்தது அந்நாட்டு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications