Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணு ஆயுத சுரங்கத்தில் குண்டு போட்ட இந்தியா.. பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்தது எப்படி? புதிய தகவல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணுஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் கிரானா மலையின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பான கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில் எக்ஸ்பர்ட் ஒருவர் சேட்டிலைட் போட்டோவுடன் அதனை உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தான் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்ததாகவும், கிரானா மலையில் தாக்குதல் நடத்தியும் பாகிஸ்தானில் அணுக்கரு கசிவு ஏற்படாதது ஏன்? என்பது பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போ் வெடித்தது. கடந்த மே 7 ம் தேதி அதிகாலையில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. நம் நாட்டில் இருந்து ஏவுகணைகள், வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து விழுந்து வெடித்தன. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

pakistan nuclear weapons kirana hills

அதன்பிறகு மே 10ம் தேதி காலையில் பாகிஸ்தானின் விமானப்படை தளம், ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்ட்டது. நம் படைகளின் அடியை தாங்க முடியாத பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்டி கெஞ்சியது. இதனால் 4 நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.

இந்த போரில் நம்மை பாகிஸ்தான் தாக்க முயன்றாலும் கூட அது நடக்கவில்லை. நம் படை வீரர்கள், வான்வெளி வீரர்கள் திறமையாக செயல்பட்டு பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தனர். மாறாக இந்த 4 நாள் போரில் பாகிஸ்தானுக்கு தான் பலத்த அடி என்பதை சர்வதேச புலனாய்வு நிபுணர்கள் எல்லோருமே சொல்லி விட்டனர். இதற்கிடையே தான் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ரகசியமாக பதுக்கி கிரானா மலையில் பதுக்கி வைத்துள்ளது. இந்த இடத்தை குறிவைத்து தக்குதல் நடத்தப்பட்டதா? என்பது தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

‛கிரானா மலையை இந்தியா தாக்கியது. இதனால் பயந்துபோய் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி கெஞ்சியது' என்றும் சொல்லப்பட்டது. ஆனால் நம் நாட்டின் அதிகாரிகள் அதனை மறுத்தனர். இதுகுறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு கூட, ‛கிரானா மலையில் எதுவும் இருந்துவிட்டு போகட்டும். கிரானா மலையில் அணுஆயுதம் இருப்பதாக கூறியதற்கு நன்றி. நாம் அங்கு தாக்குதல் நடத்தவில்லை' என்று இந்தியாவின் ஏர் மார்ஷல் நக்கலாக சிரித்தபடி சொன்னார். இதனால் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது முக்கிய ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் கிரானா மலையில் நம் நாடு தாக்கி உள்ளது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. இதனை எக்ஸ்பர்ட் ஒருவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச புலனாய்வு வல்லுநர் டேமியன் சைமன் கூறி உள்ளார். இவர் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள் இடையே நடக்கும் பதற்றங்களையும், புவிசார் அரசியல் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இவரது இந்தியா-பாகிஸ்தான் தொடர்பாக இவர் செய்து வரும் புலனாய்வுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் தான் டேமியன் சைமன் முக்கிய விஷயத்தை சேட்டிலைட் போட்டோவின் ஆதாரங்களுடன் கூறியுள்ளார். தற்போதும் சேட்டிலைட் போட்டோக்கள் மூலமாக தான் கிரானா மலை ரகசியத்தை சைமன் வெளியே கொண்டு வந்து இருக்கிறார். இதற்காக 2 படங்களை வெளியிட்டார். அது ‛ஆபரேஷன் சிந்தூர்' அட்டாக் முடிவடைந்த பிறகு ஜூன் 15ம் தேதி சேட்டிலைட் போட்டோவாகும். அதில் மலையின் அடிவாரத்தில் இந்தியாவின் ஏவுகணை பதம் பார்த்த தடயம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மலை அடிவாரத்தில் ராணுவ பாதுகாப்பு கோபுரம் இருக்கிறது. சரியாக அதில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் இந்தியா ஏவுகணை வீசி இருக்கிறது.

கிரானா மலையில் இந்தியா குண்டு வீசியதாக, மலைக்கு பக்கத்தில் வசித்த பாகிஸ்தானி ஒருவர் பதற்றத்துடன் பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் மலை அடிவாரத்தில் குண்டு வெடிக்கும் காட்சியும், புகை மூட்டம் கிளம்புவதும் தெளிவாக தெரிந்தது. அது கிரானா மலை தானா என்பதை அப்போது யாரும் உறுதி செய்யவில்லை. இதனால் அந்த வீடியோவின் உண்மை தன்மை கேள்விக்குள்ளானது. இந்த நிலையில் தான் அந்த வீடியோவும் உண்மை தான் என்று சைமன் நிரூபித்து காட்டி இருக்கிறார்.

அதாவது, பாகிஸ்தான் வெளியிட்ட குண்டு வெடிப்பு வீடியோவும், சேட்டிலைட் படம் காட்டும் ஏவுகணை பாதிப்பு இடமும் ஒரே இடம் தான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருக்கும் கிரானா மலையில் இந்தியா தாக்குதல் நடத்தியது 100 சதவீதம் உறுதியாகி விட்டது.

இருப்பினும் இந்தியாவின் தாக்குதலால் அணு ஆயுதங்கள் இருக்கும் இடம், சுரங்கம் பகுதியில் எந்த பாதிப்பும் தென்படவில்லை. காரணம், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து ஆணு ஆயுதம் இருக்கும் இடம் சற்று தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், பாகிஸ்தானை எச்சரிப்பதற்காகவே இப்படியொரு தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது என்றும் அவர் கூறினார். இதனால் தான் பாகிஸ்தானில் இருந்து அணுக்கரு கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+