திடீரென Hammer Strike நடத்திய பாகிஸ்தான்.. போர் விமானம் டூ பீரங்கி வரை.. எல்லையில் பதற்றம்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் ராணுவ தளபதி அசீம் முனீர் தலைமையில் திடீரென Hammer Strike நடத்தி உள்ளது. இதில் போர் விமானங்கள், பீரங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதோடு நம் நாட்டை சீண்டும் வகையில் அசீம் முனீர் வாய்ச்சவடால் விடுத்துள்ளார். இதனால் எல்லையில் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுக்க உள்ளனர்.

எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானப்படை விமானங்களும் அவசர கால பயிற்சியை தொடங்கி உள்ளன. இதனால் பாகிஸ்தான் அமைச்சர்கள் பயந்து போயுள்ளன. பாகிஸ்தானின் படை பலத்தை ஒப்பிடும்போது நம் படை பலம் வலிமையானது. அதோடு பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
இதனால் நம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் பெரும் சேதத்தை சந்திக்க போவதும், வீரர்கள் நம் படை வீரர்களின் தாக்குதலுக்கு பயந்து ஓட்டம் பிடிப்பதும் நடக்கத்தான் போகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் நம் நாட்டின் தாக்குதலை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் திடீரென்று ஹாமர் ஸ்டிரைக்கை மேற்கொண்டுள்ளது. இதுபாகிஸ்தான் ராணுவத்தின் மங்களா ஸ்ட்ரைக் கார்ப்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்மர் ஸ்ட்ரைக் (Exercise Hammer Strike) என்பது போர் பயிற்சியாகும். இந்த பயிற்சி என்பது பாகிஸ்தானின் தில்லா ஃபில்ட் ஃபயரிங் ரேஞ்சஸில் நடந்தது. போருக்கு தயாராகும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ராணுவ படை பிரிவுகளுக்கான புரிதல் மற்றும் போர்க்களத்தில் ஆயுதங்களை ஒருங்கிணைப்பு செய்வது உள்ளிட்டவை இந்த பயிற்சியில் அடங்கும். மல்டிரோல் போர் விமானங்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டது.
இந்த போர் பயிற்சி என்பது பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் முன்னிலையில் நடந்தது. அப்போது பாகிஸ்தான் படை வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நம் நாட்டுக்கு எதிராக வாய்ச்சவடால் விடுத்தார். இதுதொடர்பாக அசீம் முனீர், ‛‛இந்தியாவின் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் சும்மா இருக்காது. அதற்கு விரைவாகவும், உறுதியாகவும் பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல் நடத்தும். பாகிஸ்தான் தனது பிராந்திய அமைதியை விரும்புகிறது. அதேவேளையில் நாட்டின் பாதுகாப்புக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கையில் முழு ஈடுபாட்டை காட்டுவோம்'' என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானி்ன் இந்த போர் பயிற்சி என்பது நம் நாட்டின் பதிலடி தாக்குதல் மீதான பயத்தை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. இருப்பினும் கூட அதனை வெளிக்காட்டாமல் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று திமிராக பேசியுள்ளார் பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர். மேலும் பாகிஸ்தான் என்னதான் போர் பயிற்சி மேற்கொண்டாலும் கூட நம் நாட்டிடம் மோதும் போதெல்லாம் மூக்குடைப்பட்டது தான் மிச்சம். உதாரணமாக பல சம்பவங்களை கூறலாம். குறிப்பாக கூற வேண்டும் என்றால் 1971ல் வங்கதேசம் தனிநாடு கோரிக்கையின்போது நம் நாட்டின் படை வீரர்களின் பாகிஸ்தான் மண்டியிட்டு சரணடைந்தது. அதன்பிறகு 1999ல் கார்கில் யுத்தத்தில் நம் நாட்டிடம் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியடைந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications