ஆட்டம் காட்டும் ஆப்கானிஸ்தான்.. இஸ்தான்புல்லில் இந்தியா பெயரை சொல்லி இடிந்து நிற்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு, தாலிபன் அரசு கடுமையாக எதிர்க்கிறது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடந்த சில நாட்களாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், தாலிபான் அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி விட்டது என்றும், ஆப்கானிஸ்தான் அரசு, இந்தியாவின் கருவியாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி, இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தியுள்ளார்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே உறவு தற்போது சுமூகமாக இல்லை.. அதேநேரம் தாலிபன் அரசு இந்தியாவுடன் சுமூகமாக இருப்பதாக பாகிஸ்தான் நினைக்கிறது. இந்த சூழலில் அண்மையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அத்துமீறியதற்காக பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளும் மாறி மாறி தாக்கி கொண்டன. இந்த விவகாரத்தில் மோதலை முடிவுக்கு கொண்டுவர துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடந்த சில நாட்களாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இரு நாடுகள் இடையே மீண்டும் போர் மூளும் என்று அச்சம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர் புகார்
அதேநேரம் துருக்கி நடத்திய நான்கு நாள் பேச்சுவார்த்தையில் எல்லை தாண்டிய சண்டையை எதிர்கொள்வது குறித்து பொதுவான நிலைப்பாட்டையோ அல்லது ஒருமித்த கருத்தையோ எட்ட முடியாமல் போனது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் ஊடகத்திடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆசிஃப், ஆப்கானிஸ்தானுடன் ஒரு உடன்பாடு கிட்டத்தட்ட எட்டப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் அரசின் தலையீட்டால் தாலிபானின் பேச்சுவார்த்தையாளர்கள் பின்வாங்கினார்கள். காபூலில் இருந்து உத்தரவுகள் வந்த பிறகு, தாலிபான் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்தில் இருந்து நான்கு அல்லது ஐந்து முறை பின்வாங்கினார்கள்.
பின்வாங்கிய தாலிபன்கள்
கடந்த நான்கு நாட்களாகவோ ஒரு ஒப்பந்தத்தை நெருங்கும்போதெல்லாம், பேச்சுவார்த்தையாளர்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவித்தபோது, அங்கே தலையீடு ஏற்பட்டு ஒப்பந்தம் திரும்பப் பெறப்பட்டது. பேச்சுவார்த்தை நாசமாக்கப்பட்டது இதனால் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களுக்கு ஓர் ஒப்பந்தம் இருந்தது, ஆனால் அவர்கள் ஆப்கானிஸ்தான் அரசை அழைத்து, ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினார்கள் என்றார்.
சூத்திரதாரி இந்தியா
ஆப்கானிஸ்தான் அரசிற்கு "சூத்திரதாரி"யாக இருப்பது இந்தியா தான் என்றும். இந்தியா தான் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் ஆசிஃப் குற்றம் சாட்டினார். போரை முடிவுக்கு கொண்டுவரும் விவகாரத்தில் தாலிபான் அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், பாகிஸ்தானுக்கு எதிராக "பினாமிப் போரை" நடத்துவதற்காக இந்தியா ஊடுருவிவிட்டதாகவும் அபாண்டமாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவிற்கு சென்று வந்துள்ளார்கள்
இந்தியா அதன் மேற்கு எல்லையில் ஏற்பட்ட தோல்விக்கு ஆப்கானிஸ்தான் மூலம் ஈடுகட்டுவதாக கூறினார் ஆசிப். அங்கே (ஆப்கானிஸ்தானில்) உள்ள இராணுவ ஆட்சிக் குழுவில் இந்தியாவிற்குச் சென்று, அங்குள்ள கோவில்களுக்குச் சென்று வந்தவர்கள் இருக்கிறார்கள்... பாகிஸ்தானுடன் ஒரு மறைமுக போரில் ஈடுபட இந்தியா விரும்புகிறது. இதை சாதிக்க, அவர்கள் ஆப்கானிஸ்தானை பயன்படுத்துகிறார்கள்," என்று குற்றம்சாட்டினார்.
கண்களை குத்திவிடுவோம்
எதிர்காலத் தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறித்து அமைச்சர் ஆசிப்பிடம் செய்தி ஊடகம் கேட்டபோது, ஆப்கானிஸ்தான் எங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பார்த்தால், பாகிஸ்தான் அவர்களின் "கண்களைக் குத்திவிடும். அவர்கள் பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி, வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி வருகிறது என்றார்.
என்ன பிரச்சனை
இதனிடையே ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் வெளியிட்ட செய்திகளின்படி, பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் தாலிபன் அரசு உறுதியுடன் இருக்கிறதாம், ஆனால் இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தான் வான்வெளியை மீறுவதை நிறுத்த வேண்டும் என்றும், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க ட்ரோன் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததாகவும், முக்கிய கோரிக்கைகள் குறித்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தின் குழு பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் டோலோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் விளக்கம்
அதேநேரம் தஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP)-ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக முறையாக அறிவித்து, அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தாலிபன் அரசை கேட்டுக் கொண்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாக்கூப் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். பாகிஸ்தானும் பிற நாடுகளும் தங்களின் எதிரிகளுக்கு எதிராக அரசியல் நோக்கங்களுக்காகப் பயங்கரவாதம் என்ற முத்திரையைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications