காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது.. காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினை அல்ல.. பாக். திடீர் பல்டி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது என்றும் இது சர்வதேச பிரச்சினை என்றும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுவிட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.

காஷ்மீரில் பல பகுதிகளை அத்துமீறி ஆக்கிரமித்துள்ள சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியாவின் இந்த நடவடிக்கை பெரும் கிலியை கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் உலக நாடுகளை துணைக்கு அழைத்தது.

உள்நாட்டு விவகாரம்

உள்நாட்டு விவகாரம்

ஆனால் எந்த நாடும் பாகிஸ்தான் பின்னால் செல்லாமல் இந்தியாவின் பக்கம் இருந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றும் இரு நாடுகளும் அவமானப்பட்டதுதான் மிச்சம். எல்லா நாடுகளும் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிவிட்டன.

பிரதமர்

பிரதமர்

தீவிரவாதத்தை விட்டுவிட்டு பாகிஸ்தான் வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என இந்தியா தெரிவித்துவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த பாக். பிரதமர் இம்ரான் கானோ, பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும் இனி நேராக போர் தொடுப்பதுதான் என்றும் தெரிவித்தார்.

தயார் நிலை

தயார் நிலை

இந்த நிலையில் பாகிஸ்தானும் சீனாவும் இந்தியா மீது வான் வழி தாக்குதல் நடத்த போர் விமான ஒத்திகைகளை பார்த்து வந்ததால் எல்லையில் பதற்றம் நிலவியது. எனினும் இந்தியாவும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் போர் மூளும் என கூறிவந்த பாகிஸ்தான் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மாமூத் குரேஷ் கூறுகையில் பாகிஸ்தான் ஒரு போதும் ஆக்கிரமிப்பு கொள்கையை பின்பற்றியதில்லை.

பிரச்சினை

பிரச்சினை

எப்போதும் அமைதிக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை வழங்கியது. காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒரு தீர்வாகாது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினை. அது இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சினை இல்லை என மாமூத் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+