பாகிஸ்தானை நம்பி மோசம் போகும் இஸ்லாமிய நாடு.. ரூ.8,164 கோடிக்கு விமான டீல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிடம் இருந்து ரூ.8,164 கோடி மதிப்பீட்டில் 25 ஜேஎஃப் - 17 தண்டர் பிளாக் III ரக போர் விமானங்களை வாங்கி இஸ்லாமிய நாடான சோமாலியா முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் சோமாலியா ஏமாந்து போகலாம் என பலரும் கூறி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தானை போல் சோமாலியாவும் இஸ்லாமிய நாடாக உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானிடம் இருந்து புதிய விமானங்களை கொள்முதல் செய்ய சோமாலியா திட்டமிட்டுள்ளது.

அதன்படி பாகிஸதானிடம் இருந்து 24 JF-17 தண்டர் பிளாக் III ரக போர் விமானங்களை வாங்கி சோமாலியா முடி்வு செய்துள்ளது. இந்த விமானங்களை சுமார் 800-900 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்க சோமாலியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் இந்திய மதிப்பு என்றால் ரூ. ரூ.8,165 கோடியாகும்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் - சோமாலியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. இதுபற்றி டிஃபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் தகவலின்படி சோமாலியா விமானப்படை தளபதி முகமது ஷேக் அலி சமீபத்தில் பாகிஸ்தானுக்குச் சென்றார். அங்கு JF-17 தண்டர் போர் விமானங்களின் ஒப்பந்தம் சார்ந்த பேச்சுவார்த்தையை அவர் நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. சோமாலியாவை பொறுத்தவரை மிகவும் ஏழை நாடு. பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் சோமாலியாவை சுற்றி பல பிரச்சனைகள் உள்ளன. சோமாலியாவில் இருந்து பிரிந்து சுயாட்சி பிரதேசமாக செயல்பட்டு வரும் சோமாலிலாந்தை இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதனால் இஸ்ரேலால் கூட பிரச்சனை வரலாம். மேலும் பல கிளர்ச்சியாளர்கள் சோமாலியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் சோமாலியா தனது நாட்டை தற்காத்து கொள்ள வேண்டும் என்றால் விமானப்படையை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்கு போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சோமாலியா ஜேஎஃப் 17 தண்டர் போர் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் ஜேஎஃப் 16 தண்டர் பிளாக் III ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் தயாரிப்பாகும். பாகிஸ்தான் - சீனா சேர்ந்து ஜேஎஃப் 16 ரக விமானங்களை தயாரித்த நிலையில் அதன் அடுத்தக்கட்ட வெர்ஷன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜேஎஃப் 16 தண்டர் பிளாக் 1, 2, 3 என்ற வெர்ஷன்கள் தயாரிககப்பட்டுள்ளது. அதில் ஜேஎஃப் 16 தண்டர் பிளாக் III-யை சோமாலியா வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
இது 4.5ம் தலைமுறை விமானமாகும். இந்த விமானத்தை வைத்து ஏர் டூ ஏர், ஏர் டூ சர்பேஸ், ஏர் டூ போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த முடியும். பாகிஸ்தான் தனது ஆயுதப்படைகளை நவீனமயமாக்கி வரும் நிலையில் அதில் முக்கிய மைல்கல்லாக இந்த விமானத்தை பாகிஸ்தான் கருகிறது. தற்போது இந்த விமானங்களை பாகிஸ்தான், சீனா, மியான்மர் பயன்படுத்தி வரும் நிலையில் சோமாலியா ஆர்வம் காட்டி வருகிறது.
இருப்பினும் இந்த விமானத்தை விட ரபேல் போர் விமானங்கள் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். இதனால் தான் சோமாலியா ரபேல் போர் விமானத்தை விட பாகிஸ்தானின் ஜேஎஃப் 16 தண்டர் பிளாக் III விமானத்தை வாங்க முனைப்பு காட்டி வருகிறது.
மியான்மர் தற்போது இந்த விமானங்களை பயன்படுத்தி வரும் நிலையில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் விமானத்தில் அதிகப்படியான வெப்பம் வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானில் தான் விமானம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் விமான தயாரிக்க போதிய வசதி பாகிஸ்தானிடம் இல்லை. இதனால் விமான பராமரிப்பு, அவசர டெலிவரி உள்ளிட்டவற்றில் பிரச்சனைகள் உள்ளன.
இதனால் உண்மையில் இந்த விமானத்தை வைத்து கிளர்ச்சியாளர்களை சோமாலியா மிரட்டலாம்- தாக்கலாம். ஆனால் இஸ்ரேல் உள்பட பிற எதிரி நாடுகளை மிரட்ட முடியாது. இதனால் இந்த டீல் சோமாலியாவுக்கு ஏமாற்றமாவேக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications