"பவர்புல் நாடு!" இந்தியாவை ஆதரிக்கும் அந்த நாடு தான் எல்லாத்துக்கும் காரணம்..புலம்பும் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இம்ரான் கானின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் இருந்தும் கூட பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவம் கூட இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதால், அவர் ஆட்சியைத் தக்க வைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் பாக். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது சில நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளே இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதால், அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கோபம்
மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் அந்நிய நாட்டுச் சதி உள்ளதாகவும் அவர் சாடினார். இந்நிலையில், இன்று இஸ்லாமாபாத்தில் பேசிய இம்ரான் கான் இது தொடர்பாக வேறு சில முக்கிய தகவல்களையும் தெரிவித்துள்ளார். அதாவது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்குப் பின்னர், இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நாடு உள்ளதாக அவர் சாடியுள்ளார். சமீபத்தில் தான் ரஷ்யா சென்று வந்ததாலேயே அந்த சக்திவாய்ந்த நாடு, பாக். மீது கோபமாக உள்ளதாகவும் அவர் சாடி உள்ளார்.

பவுர்புல் நாடு
இஸ்லாமாபாத்தில் பேசிய இம்ரான் கான், "எந்தவொரு நாட்டிற்கும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை என்பது முக்கியமானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சுயமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு நாட்டால் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது. வெளிநாட்டு உதவிக்காக மற்ற நாடுகளின் விருப்பத்திற்கு அடிபணிவதை விட ஒரு நாட்டின் நலன்களைப் பாதுகாக்கச் சுதந்திரமான முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது" என்றார்.

இம்ரான் கான்
மேலும், அமெரிக்காவைச் சக்திவாய்ந்த நாடு என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுத் தாக்கிய இம்ரான் கான், சமீபத்தில் தான் ரஷ்ய சென்று வந்தால், அந்த சக்திவாய்ந்த நாடு அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மறுபுறம், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அதன் நட்பு நாடான இந்தியாவை இந்த பவுர்புல் நாடு ஆதரிப்பதாகவும் அவர் சாடினார். பாக். அரசுக்கு எதிரான அச்சுறுத்தும் கடிதம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதருக்குப் பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பி இருந்தது. இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் இப்போது இந்த முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான்
கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க ரஷ்யா உத்தரவிட்டிருந்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவில் தான் இருந்தார். இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், பாகிஸ்தான் தொடர்ந்து ரஷ்யா, சீனா உடன் நெருங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications