பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு இம்ரான் வரவில்லை.. பிற்பகல் வரை அவை ஒத்திவைப்பு!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானும் அவர் ஆதரவு எம்பிக்களும் வரவில்லை. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பிற்பகல் 12.30 மணி வரை (பாக் நேரப்படி) ஒத்தி வைக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவருக்கு கொடுத்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன.

இதையடுத்து அவர் மீது எதிர்க்கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

 பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இந்த விவகாரத்தை பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

நம்பிக்கை இல்லா தீர்மானம்

மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்ததும் செல்லாது என தெரவித்த உச்சநீதிமன்றம் இன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. அந்த வகையில் இன்றைய தினம் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

172 எம்பிக்கள் ஆதரவு

172 எம்பிக்கள் ஆதரவு

342 எம்பிக்களை கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 172 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. கடைசி பந்து வரை நின்று விளையாடுவேன் என இடைக்கால பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதுவரை பாகிஸ்தானில் எந்த பிரதமரும் 5 ஆண்டுகள் தங்கள் பதவி காலத்தை நிறைவேற்றியதே இல்லை. இந்த வாக்கெடுப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் அரசு இந்த வாக்கெடுப்பில் தப்புமா இல்லை கவிழுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

 இம்ரான் கான் அரசு

இம்ரான் கான் அரசு

ஒரு வேளை இம்ரான் கான் அரசு இந்த வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால், உடனடியாக அடுத்த பிரதமரை தேர்வு செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீபிற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார்.

 பாகிஸ்தான் நாடாளுமன்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்றம்

இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்காக எதிர்க்கட்சியினர் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஆளுங்கட்சியினர் வரவே இல்லை. இதனால் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போக வாய்ப்பிருப்தாக பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கூடியது

நாடாளுமன்றம் கூடியது

இந்த நிலையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கா பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி அவை நடவடிக்கைகளை நீங்கள் (சபாநாயகர்) நடத்துவீர்கள் என நம்புகிறேன். அரசியலமைப்பு சட்டபடி நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார். அமைச்சர் ஷா மமூத் குரேஷி பேசுகையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் அரசியலமைப்பு உரிமை. அதை எதிர்கொள்வது அரசின் கடமை என்றார். இதையடுத்து பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத் குவைசர் அவை நடவடிக்கைகளை பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 12.30 மணிவரை ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+