டார்கெட் இந்தியா.. வங்கதேச வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தான்.. ஷேக் ஹசீனாவுக்கு குறி ஏன்? பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாகி உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐ இருப்பதாகவும், வங்கதேச வன்முறை மூலம் அந்த அமைப்பு இந்தியாவையும் குறிவைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து தனி நாடாக மாறியது. வங்கதேசத்தில் இந்த சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை வங்கதேசத்தில் நடைமுறையில் இருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் 2018 ல் நீக்கப்பட்டது.

ஆனால் இந்த இடஒதுக்கீடு முறையை மீண்டும் அமல்படுத்த அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மாணவர்கள் கடும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. போராட்டம் வன்முறையான நிலையில் மொத்தம் 280 பேர் வரை கொலை செய்யப்பட்டனர்.
இதனால் மாணவர்கள் போராட்டம் என்பது அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களாக மாறின. ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. போராட்டங்களை ஒடுக்க வங்கதேச அரசு எடுத்த எந்தவொரு நடவடிக்கைக்கும் பலன் கிடைக்கவில்லை. மாணவர் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுக்க பரவிய நிலையில், ஷேக் ஹசீனா வேறு வழியில்லாமல் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதோடு ஷேக் ஹசீனா பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தை விட்டு வெளியேறி நம் நாட்டுக்கு வந்துள்ளார். நம் நாட்டில் தற்காலிகமாக இருக்கும் ஷேக் ஹசீனா அதன்பிறகு பிரிட்டன் சென்று தனது சகோதரியுடன் அடைக்கலம் தேட உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அங்கே தற்காலிகமாக ஆட்சியை அமைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேச வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐஎஸ்ஐ என்பது பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ உளவு மற்றும் புலனாய்வு அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பு தான் வங்கதேசத்தில் மாணவர்களை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது.
மேலும் இந்த ஐஎஸ்ஐ அமைப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் அரசை கலைப்பது தான். ஏனென்றால் ஷேக் ஹசீனா இந்தியா ஆதரிக்கிறது. இதனை பாகிஸ்தான் விரும்பவில்லை. மாறாக ஷேக் ஹசீனாவுக்கு பதில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (பிஎன்பி) ஆட்சியை கொண்டு வருவது தான் ஐஎஸ்ஐ-யின் நோக்கமாக உள்ளது.
இதனால் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வங்கதேசத்தில் கவிழ்த்து பிஎன்பி கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கும் குடைச்சலை தர முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது. அதாவது வங்கதேசத்தில் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று ஐஎஸ்ஐ அமைப்பு திட்டமிட்டு இந்த சதிச்செயலை அரங்கேற்றி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த வன்முறைக்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு பல்வேறு சதித்திட்டங்களை முறையான திட்டத்துடன் வங்கதேசத்தில் செய்து வந்துள்ளது. அதன்படி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலகி நாட்டை விட்டு வெளியேற ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் மாணவர் போர்வையில் ஸ்லீப்பர் செல்களாக தலைநகர் டாக்காவில் முழுநேரமாக வேலை செய்துள்ளார்.
மேலும் டாக்காவில் பதற்றத்தை அதிகரிக்க ஜமாத் மற்றும் அவர்களின் மாணவர் பிரிவு சத்ரா ஷிவிரை பயன்படுத்தி உள்ளனர். பல ஜமாத்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருவதால் இதனை ஐஎஸ்ஐ உளவு அமைப்பு வெற்றிக்கரமாக செய்து முடித்துள்ளது. இதுதவிர டாக்காவில் உள் பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து அந்த ஜமாத்களுக்கு அறிவுரைகள் சென்றுள்ளன.












Click it and Unblock the Notifications