For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி!

இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார்.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி அதை தேர்தல் லாபத்துக்காக பாஜக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. தேவையில்லாமல் இந்திய அரசு போரை தொடங்க விரும்புகிறது.

போரை உருவாக்குவதில் எங்களுக்கு எப்போதுமே விருப்பம் இல்லை என்று பாஜகவிற்கு எதிராக கடுமையாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது பாஜகவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழிசையின் தந்தை குமரி அனந்தனுக்கு உடல் நலக்குறைவு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை தமிழிசையின் தந்தை குமரி அனந்தனுக்கு உடல் நலக்குறைவு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இம்ரான் கான் தனது பேட்டியில் ''இந்தியாவில் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கனவிலும் கூட நினைக்கவில்லை. இந்தியாவில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள்.

பாதுகாப்பு இல்லை

பாதுகாப்பு இல்லை

அங்கு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி தீர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர்களுக்கு அந்த தைரியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் ஏதாவது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.

தீர்வு

தீர்வு

பாஜக ஆட்சி மீண்டும் வரும் பட்சத்தில் அது காஷ்மீர் பிரச்சனையில் தீவிரமான முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. காஷ்மீர் பிரச்சனை ராணுவம் மூலம் தீர்க்கப்பட கூடிய ஒன்று கிடையாது. இது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். இந்திய ராணுவத்தால் காஷ்மீர் மக்கள் பெரிய கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

நட்பு

நட்பு

பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் நட்பாகவே இருக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா ஆகிய நாடுகளுடன் நாங்கள் நட்பாகவே இருக்க விரும்புகிறோம். நாம் எல்லாம் ஒன்றாக இருந்தால் 100 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து வெளியே வருவார்கள் என்று இம்ரான் கான் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Peace talks will be better if BJP comes to power once again says PAK PM Imran Khan on JK issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X