பட்டு குகை முருகன் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்க "ஐஎஸ்" சதி... மலேசியாவில் பரபரப்பு!
கோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பட்டு குகை முருகன் கோவில் உள்பட அந்த நாட்டின் பல இடங்களில் குண்டு வைத்துத் தாக்குதல் நடத்தி பொது அமைதியை சீர்குலைக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது தெரிய வந்து மலேசியாவே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக மலேசிய உளவுப் பிரிவினர் இதை முன்கூட்டியே அறிந்து 3 பேரைக் கைது செய்து திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மலேசியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிலையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது உளவுப் பிரிவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்தி தாக்குதல் திட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேரை மலேசியப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பட்டு குகை முருகன் கோவில்
பட்டு குகை முருகன் கோவில், அங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை,த காவல் நிலையங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றை தீவிரவாதிகள் குறி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டம்
கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து தாக்குதல் நடத்த இந்த 3 பேரும் திட்டமிட்டுள்ளனர். இவர்களை புகின் அமான் சிறப்பு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கோலாலம்பூர், செலாங்கூர், பஹாங் ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்துள்ளனர். ஒருவர் ஆகஸ்ட் 27ம் தேதியும், மற்ற இருவரும் ஆகஸ்ட் 29ம் தேதியும் கைதாகியுள்ளனர்.

3 பேர் கைது
இதுகுறித்து போலீஸ் ஐஜி காலித் அபுபக்கர் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான முகம்மது வன்டி முகம்மது ஜெடி என்பவரிடமிருந்து வந்த உத்தரவுகளின் பேரில் இவர்கள் செயல்பட்டு வந்தனர். கைதான 3 பேரில் ஒருவருக்கு வயது 20 ஆகும். இவரை செலாங்கூரில் வைத்து ஆகஸ்ட் 27ம் தேதி கைது செய்தோம். அவரிடமிருந்து கையெறி குண்டுகள், பிஸ்டல், துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிரியாவுக்குத் தப்பத் திட்டம்
மற்ற இருவருக்கும் வயது 20, 27 இருக்கும். இவர்களை ஆகஸ்ட் 29ம் தேதி கைது செய்தோம். இவர்கள் தாக்குதலுக்குப் பின்னர் சிரியாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர் என்றார் அவர்.

மலேசியாவில் ஐஎஸ்
பிற நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுறுவுவதைப் போலவே மலேசியாவிலும் ஊடுறுவி வருகின்றனர். கடந்த மாதத் தொடக்கத்தில் 68 மலேசியர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரவுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவர்களின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்தது மலேசிய அரசு. மேலும் ஏற்கனவே ஐஎஸ் அமைப்பில் இணைந்து சிரியாவில் போரில் ஈடுபட்டு இதுவரை 26 மலேசியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்த நாட்டு அரசு கூறுகிறது. இவர்களில் சிலர் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக செயல்பட்டுள்ளனர்.
தற்போது புகழ் பெற்ற பட்டுக் குகை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்குத் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications