மாஜி மனைவி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த நபர்.. அமெரிக்காவில்

Subscribe to Oneindia Tamil

டக்ளஸ்வில்லி, அட்லான்டா: அமெரிக்காவின் அட்லான்டா நகருக்கு அருகே நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் துப்பாக்கியால் சுட்ட நபரும் அடக்கம்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். டக்ளஸ்வில்லி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அட்லான்டாவுக்கு மேற்கில் உள்ள புறநகர்ப் பகுதியான டக்ளஸ்வில்லியில் ஒரு இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. அங்கு அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும், போலீஸ் படை விரைந்தது.

Police: 5 dead, including gunman, in US shooting

இதுகுறித்து டக்ளஸ்வில்லி நகர ஷெரீப் அலுவலகத்தைச் சேர்ந்த கிளன் டேணியல் கூறுகையில், துப்பாக்கியுடன் அந்த வீட்டுக்கு வந்த நபர் அங்கிருந்த தனது முன்னாள் மனைவி மற்றும் அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக சுட்டார். பின்னையும் தன்னையும் அவர் சுட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் விசாரணை நடந்து வருகிறது.

சம்பந்தப்பட்ட வீட்டில் வசித்து வந்த பெண் பல குழந்தைகளுடன் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். இக்குழந்தைகள் அக்கம் பக்கத்தினரை மிகவும் கவர்ந்தவை, பழகியவையாகும். இவர்களில் 3 பேர் தற்போது பலியாகியுள்ளது அக்கம் பக்கத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+