காருக்குள் “சரக்கு”.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மகன் அதிரடி கைது... அதே நாளில் விடுதலை..!
இஸ்லாமாபாத் : காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வளர்ப்பு மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவியில் உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார்.
தற்போது இம்ரான் கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ள நிலையில் அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது.

வளர்ப்பு மகன்
அவரது மகனான மூசா மேநேகா தான் தற்போது காருக்கு மதுபானங்களை பதுக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கானை புஷ்ராவை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னதாகவே வேறு ஒருவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. இம்ரான்கான் புஷ்ராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் புஷ்ராவின் மகன் மூஸாவையும் மகனாகக் கருதி வளர்த்து வந்தார்.

மகன் கைது
இந்த நிலையில் மூசா தனது காரில் மதுபானங்கள் வைத்திருந்ததாக பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் காரில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் விடுதலை
உயர்மட்ட அளவில் அழுத்தம் காரணமாக வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் இவ்விவகாரத்தை பெரிதாக்கி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி மூலமாக நேருக்கு நேர் விவாதம் செய்ய விரும்புவதாக இம்ரான்கான் கூறியிருந்த நிலையில் அவர் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.

மது சட்டவிரோதம்
மது வைத்திருந்ததற்காக மேநேகா கைது செய்யப்பட்டபோது, பாகிஸ்தானின் முதல் பெண்மணியின் மகன் என்பதால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாதுகாப்பு அதிகாரிகளை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் மது விற்பனை மற்றும் நுகர்வு சட்டவிரோதமானது ஆகும்












Click it and Unblock the Notifications