பாதிரியார்களின் 'செக்ஸ்' குற்றம்... பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் மன்னிப்பு கேட்ட போப் ஆண்டவர்
வாடிகன்சிட்டி: பாதிரியார்களின் பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் - சிறுமிகள் பலர் பாலியல் குற்றத்துக்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப் பட்டது.
இந்நிலையில், வாடிகன் சிட்டியில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார் போப் ஆண்டவர்.

அப்போது அவர் பேசியதாவது:-
கெஞ்சிக் கேட்கிறேன்...
பாதிரியார்களின் ‘செக்ஸ்' குற்றத்தை மறுந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமை களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மன்னிப்பு...
அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இருந்தாலும் அவர்கள் செய்த குற்றத்தையும் பாவச் செயல்களையும் விட்டு விடுங்கள். அவர்களின் செயலுக்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மனவேதனை...
செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்களை நினைக்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மொழிபெயர்ப்பு...
பிரார்த்தனையின்போது போப்பின் ஆங்கில உரை, ஸ்பெயினில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications