"விடிய விடிய நிர்வாண பார்ட்டி.." உச்சக்கட்ட கோபத்தில் புதின்.. கலந்து கொண்டது யார் தெரியுமா.. பகீர்
மாஸ்கோ: ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த நிர்வாண பார்ட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் நேரடியாக புதின் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் போர் பல மாதங்களாகத் தொடர்ந்தாலும் கூட அது முடிவுக்கு வர எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை. இதில் ரஷ்யா பல வீரர்களை இழந்துள்ளது.

மேலும், பல பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொண்டுள்ளது. இப்படி ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் ஆண்டுக் கணக்கில் தொடரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த பார்ட்டி ஒன்று குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியது.
நிர்வாண பார்ட்டி: அதாவது போர் ஒரு பக்கம் தொடரும் நிலையில், மாஸ்கோவில் பிரபலங்கள் கலந்து கொண்ட கிட்டத்தட்ட நிர்வாண பார்ட்டி நடந்துள்ளது. கடந்த டிச.21ஆம் தேதி இந்த பார்ட்டி நடந்த நிலையில், இது குறித்த போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது. இது குறித்த தகவல்கள் ரஷ்ய அதிபர் புதினுக்கு சென்ற நிலையில், அவர் இதைக் கேட்டதும் கொந்தளித்துவிட்டராம்.
மாஸ்கோவில் உள்ள முடபோர் நைட் கிளப் என்ற இடத்தில் நடந்த இந்த பார்ட்டியை அனஸ்தேசியா இவ்லீவா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொண்ட நிகோலாய் வாசிலியேவ் என்பவர் சாக்ஸை மட்டுமே அணிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவரது படங்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வாசிலியேவ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், பெரும் தொகை அவருக்கு அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
புதின்: உக்ரைனில் போரிட்டு வரும் ரஷ்ய படை இது குறித்து அறிந்ததும் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பார்ட்டியின் படங்களை புதின் நேரடியாக பார்த்ததாகவும் அதைப் பார்த்து அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நேரடியாகக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாகக் கருத்து கூறி புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்துவிட்டார். இந்த நிகழ்வைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்குமாறு அவர் செய்தியாளர்களிடம் கேட்டுள்ளார். அந்தளவுக்கு இந்த பார்ட்டி என்பது அங்குள்ள மக்களையும் ராணுவத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது. பலரும் இந்த பார்ட்டி நடத்தியவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கொந்தளிப்பு: இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பான இணையத்திற்கான லீக்கின் இயக்குநர் யெகாடெரினா மிசுலினா கூறுகையில், "உக்ரைனில் நமது வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். அங்கே பலர் வீர மரணம் அடைந்து வருகிறார்கள். இதனால் பல குழந்தைகள் தங்கள் தந்தையைக் கூட இழந்து வருகின்றனர். அவர்கள் அப்படிப் போராடும் போது இப்படி பார்ட்டி வைத்து கூத்தடிப்பது நிச்சயம் சரியான நடைமுறை இல்லை" என்று சாடினார்.
ரஷ்யாவில் சமீப காலமாகப் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கே முட்டை விலை கூட முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ரஷ்ய மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுகளைக் கூடப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படியொரு சூழலில் ஒட்டுமொத்த ரஷ்யாவும் கடும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், இந்த நிர்வாண பார்ட்டி அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.
இதில் ரஷ்யாவின் பிரபல டாப் நட்சத்திரங்களான பிலிப் கிர்கோரோவ், லொலிடா மற்றும் டிமா பிலன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், 2018இல் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட க்சேனியா சோப்சாக் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இதை எல்லாம் விட ரஷ்ய அதிபர் புதினால் வளர்க்கப்படும் (goddaughter) க்சேனியா சோப்சாக் என்பவரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications