தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல்.. அமெரிக்கா எங்களை எச்சரிக்கவில்லை! - கத்தார்
தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து முன்கூட்டியே கத்தாருக்கு நாங்கள் எச்சரித்திருந்தோம் என அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், இதை கத்தார் மறுத்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்திருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் இஸ்ரேலின் நண்பனான அமெரிக்கா போர் நிறுத்தம் முன்மொழிந்திருந்தது. போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்தான் தாக்குதல் நடந்தது.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் இருந்ததாகவும், அவர்களை இஸ்ரேல் தாக்க உள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் கத்தாருக்கு தெரிவித்தது என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் இதை கத்தார் மறுத்துள்ளது. அமெரிக்கா அதிகரிகள் போன் செய்தபோது தாக்குதல் சத்தம் கேட்தாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications