யார் இந்த "ராணி"?.. செம பிஸியாமே.. பண்ணையில் ஒரே கூட்டம்.. ரிக்ஷாவில் வந்து இறங்கும் நபர்கள்..!
உயரம் குறைந்த பசுமாடு ராணி கின்னஸில் இடம்பெற உள்ளது
டாக்கா: கொரோனா வைரஸ் நாட்டிற்குள் வந்திருக்கிறது என்ற நினைப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஒரு பசுமாட்டை வேடிக்கை பார்த்துள்ளனர்.. அது என்ன பசு மாடு? என்ன ஸ்பெஷல்?
வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள இடம் சாரிகிராம்.. இது டாக்காவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. இங்கு ஷிகோர் என்ற விவசாயி வசித்து வருகிறார்..
இவருக்கு சொந்தமாக ஒரு பண்ணை உள்ளது.. அந்த பண்ணையில் ஒரு பசுமாடு உள்ளது.. அந்த பசுமாடுதான் டாக்காவில் ஹாட் டாப்பிக்..!

ராணி
அந்த பசுமாட்டுக் பெயர் ராணி.. பசு 51 சென்டிமீட்டர் நீளம் உடையது.. 57 பவுண்டுகள் அதாவது 26 கிலோகிராம் மட்டுமே எடை இருக்கிறது.. இந்த பசுதான் உலகிலேயே மிக குள்ளமான பசு.. இதற்கு முன்பு கின்னஸ் சாதனையில் மிக குள்ளமான பசு இடம்பெற்றிருந்தது.. கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்பவரின் பசு அது.. கடந்த 2014ல முதல் இந்த பசுதான் கின்னஸில் முதலிடத்தில் உள்ளது.. அதன் உயரம் 61 செமீ ஆகும்.

லாக்டவுன்
ஆனால், அந்த பசுவைவிட ராணி 10 சென்டிமீட்டர் குறைவாம்.. அதனால், ராணிதான் இப்போதைக்கு கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளதாக கூறகிறார்கள். இப்போது சோஷியல் மீடியா முழுக்க ராணி போட்டோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட டாக்கா மக்கள், கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளது என்பதை கூட மறந்து வேடிக்க பார்க்க திரண்டு வந்தனர்.

பசுமாடு
கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.. ஒருபக்கம் ராணியும், இன்னொரு பக்கம் ராணியை பார்க்க முந்தியடிக்கும் என வீடியோக்கள் வைரலானது.. இறுதியில் இந்த விஷயம், சுகாதாரத்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, யாரையும் பண்ணையில் சேர்க்காதீங்க என்று பண்ணை ஓனர் ஷிகோருக்கு அறிவுறுத்தி உள்ளனராம்..

குவியும் கூட்டம்
இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், இப்போது லாக்டவுன் என்பதால் போக்குவரத்து எதுவும் இல்லை.. ஆனாலும், டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த பண்ணைக்கு மக்கள் ரிக்ஷாவை பிடித்து வந்து கொண்டிருக்கிறார்களாம்.. இப்போ ராணி செம பிஸி..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications