பின்னாடியே வந்த கொக்கு.. கடுப்பான காண்டாமிருகம்... அயய்ய்ய்யே... அதுக்காக இப்படியா பண்ணும்!
நைரோபி: நைரோபியில் ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த காண்டாமிருகம் அதன் பின்புறம் இருந்த கொக்கின் மீது சிறுநீர் கழித்ததும் அதில் அந்த கொக்கு உல்லாசமாக குளித்ததும் வைரலாகி வருகிறது.
கென்யாவில் நைரோபியில் உள்ளது தேசிய உயிரியல் பூங்கா. இந்த பூங்காவிற்கு நாகராஜ் திலகராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவர் ஒரு ஆச்சரியமான விஷயத்தை தனது கேமராவில் படம் பிடித்தார்.
அதை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு அது வைரலாகி வருகிறது. காண்டாமிருகம் ஒன்று பின்னால் நின்றிருந்த கொக்கின் மீது சிறுநீர் கழித்தது.

காண்டாமிருகம்
அதாவது தேசிய பூங்காவில் ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது அதன் பின்னால் ஒரு கொக்கு நிற்கிறது. திடீரென காண்டாமிருகத்திற்கு சிறுநீர் வந்துவிட்டது, இதனால் பீய்ச்சி அடித்தது. அப்போது கொக்கின் மீதும் பீய்ச்சி அடித்தது. அத்தனை வேகமாக அடித்த போதிலும் அந்த கொக்கு இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. ஏதோ ஷவரில் குளித்தது போல் நிற்கிறது. இந்த சம்பவம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

வைரல்
இதுகுறித்து அந்த புகைப்படத்தை எடுத்த நபர் கூறுகையில் இந்த புகைப்படம் எதிர்பாராதவிதமாக எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது அந்த கொக்கு அந்த இடத்தை விட்டு நகராமல் பாத்ரூம் ஷவரில் குளிப்பது போல் உற்சாகமாக குளியல் போட்டது என் ரசனையை தூண்டிவிட்டது.

கொக்கு
குறிப்பாக சொல்வதென்றால் கொக்கின் மீது சிறுநீர் கழிக்கிறோமே என காண்டாமிருகமும், தன் மீது தண்ணீர் அடிக்கப்படுகிறதே என கொக்கும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எனது மகன் காண்டாமிருகங்களையும் ஒட்டசிவிங்கிகளையும் விரும்புவார். அதனால் இந்த தேசிய பூங்காவிற்கு நாங்கள் வந்தோம் என்றார்.

பெண் காண்டாமிருகம்
பொதுவாக ஆண் காண்டாமிருகத்தின் பிறப்புறுப்பு சற்று நீண்டு வெளியே தெரியும்படி இருக்கும். அப்போதுதான் சிறுநீரை வேகமாக பின்னோக்கி அடித்து பெண் காண்டாமிருகத்தை ஈர்க்குமாம். இந்த சிறுநீர் 16 அடி தூரம் வரை செல்லுமாம். நல்ல வேளை இந்த புகைப்படத்தை எடுத்த நாகராஜ் 30 அடி தூரத்தில் நின்றிருந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications