ஆடு மாடு போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்! கண்ணீரில் மிதக்கும் காசா.. லெபனான் நிலைமையோ மோசம்!
ஜெருசலேம்: காசா, லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 140-க்கும் மேற்பட்டோரும், லெபனானின் ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.
ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அந்த வகையில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹைத்திக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 14 குழந்தைகள் உட்பட 38 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 140-க்கும் மேற்பட்டோரும், லெபனாரின் ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு தற்போது இஸ்ரேலின் பார்வை காசா மற்றும் லெபனான் மீது மீண்டும் திரும்பி உள்ளது. அங்கு மீண்டும் தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. மேலும், சிடோன் நகருக்கு அருகிலுள்ள சரஃபாண்ட் மற்றும் ஹரேட் சைடாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த செவ்வாயன்று காசா முழுவதும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 143 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 132 பேர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காசாவின் வெஸ்ட் பேங்க் பகுதி முழுவதும் இஸ்ரேல் படை தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஹெப்ரோன் நகரில் பல பகுதிகள் சூறையாடப்பட்டதாகவும், ரமல்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள புர்கா கிராமத்தில் இஸ்ரேல் படைகளுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதேபோல நர்சலின் கிழக்கே உள்ள பலாடா அகதி முகாமிலும் குண்டு வெடிப்பு மற்றும் ஆயுத மோதல்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் போராளி குழுக்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து எல்-பிரே நகரில் பணம் பரிமாற்றம் செய்யப்படும் நிறுவனங்களிலும் இஸ்ரேல் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications