அசர வைக்கும் டீலிங்.. இந்தியா வரும் ரஷ்யாவின் 33 நவீன போர் விமானங்கள்.. பலம் வாய்ந்த ஆயுதங்கள்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவிடம் இந்தியா கேட்டு இருந்த போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை உடனே வேகமாக வழங்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    India-வுக்கு Russia-வழங்கும் 33 நவீன போர் விமானங்கள்..ஆயுதங்கள்!

    சீனாவுடன் லடாக்கில் இந்தியா மோதி வரும் நிலையில் தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்திய விமானப்படை அவசர அவசரமாக போர் விமானங்களை வாங்க இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மிக் -29 மற்றும் சுகோய் -30 எம்கேஐ விமானங்களை வாங்க இருக்கிறது. மொத்தம் 6000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த விமானங்களை இந்தியா வாங்க இருக்கிறது.

    மொத்தம் 33 விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. இந்தியா மொத்தம் 21 மிக் -29 விமானங்களை வாங்குகிறது. அதேபோல் 12 சுகோய் -30 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதோடு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வாங்க இருக்கிறது. S-400 Triumph missile system எனப்படும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் சிஸ்டம் ஆகும் இது. இதைதான் இந்தியா கேட்டு இருக்கிறது. இந்த ஆயுதங்களுக்கான ஒப்பந்தங்கள் கடந்த வருடமே போடப்பட்டு விட்டது.இதன் மதிப்பு 5.4 பில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இதற்கான 75% பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது.

    என்ன ஒப்பந்தம்

    என்ன ஒப்பந்தம்

    இந்த ஒப்பந்தத்தை முடிப்பதற்காக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் ரஷ்யா சென்று இருந்தார். இதில் சுமுகமான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கணக்குப்படி இந்த போர் விமானங்கள் மற்றும் போர் கருவிகள் எல்லாம் அடுத்த வருடம் இறுதியில்தான் இந்தியாவிற்கு வர வேண்டும்.

    அதாவது இந்தியாவின் ஒப்பந்தத்தின்படி அடுத்த வருடம் டிசம்பர் பாதியில்தான் இந்த போர் கருவிகள் இந்தியாவிற்கு வர வேண்டும். ஆனால் இந்தியா அவசரமாக வேண்டும், இந்த ஒப்பந்தத்தை உடனே முடித்து விமானங்களை இந்தியாவிற்கு அனுப்புங்கள் என்று ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்தது.

    அதிக வேகம்

    அதிக வேகம்

    இந்த நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ரஷ்யா ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு உடனே போர் விமானங்கள் மற்றும் ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டு இருக்கிறது. அதிலும் வெறும் 2-3 மாதங்களில் இந்தியாவிற்கு இந்த ஆயுதங்களை ரஷ்யா வழங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எப்போது வரும்

    எப்போது வரும்

    அக்டோபர் மாதத்தில் பெரும்பாலும் இந்த போர் விமானங்கள், ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் இந்தியாவிற்கு வந்துவிடும் என்று கூறுகிறார்கள். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இந்தியா தனது கடைசி லிஸ்டை அனுப்பினால் மட்டும் போதும். உடனே இந்தியாவிற்கு தனது போர் விமானங்களை ரஷ்யா அனுப்பிவிடும்.

    ஏவுகணை தாக்கி அழிக்கும்

    ஏவுகணை தாக்கி அழிக்கும்

    இந்த போர் விமானங்களை மற்றும் ஏவுகணை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இன்னும் நிறைய நாடுகள் லைனில் நிற்கிறது. இதனால்தான் இந்தியாவின் டெலிவரி அடுத்த வருடம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வெறும் 3 மாதத்தில் போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. சீனாவிற்கு இது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+