Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்யப் பெண்.. இப்போது ஒன்றல்ல, இரண்டு.. மகிழ்ந்து போய் போஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யப் பெண், தனது கணவனை விட்டுபிரிந்த பின்னர் தனது வளர்ப்பு மகனையே திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த பெண், வளர்ப்பு மகனால் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார்.

உலகில் நாம் நினைத்து பார்க்காத பல விஷயங்கள் நடந்து வருகிறது. பல நேரங்களில், மக்கள் மிகவும் வயதான அல்லது மிகவும் இளைய வயது உடையவர்களை திருமணம் செய்து கொள்வதை தலைப்புச் செய்தியாக பார்த்திருப்போம். ஆனால் ஒரு தாய் தன் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொள்வதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Russian Woman Married Stepson at 2020, Now A Mother Of 2

2020 ஆம் ஆண்டில், ஒரு ரஷ்ய பெண் தனது வளர்ப்பு மகனை திருமணம் செய்தார். இது தான் அன்றைக்கு இணையத்தையே அதிர வைத்த செய்தியாகும். இந்த செய்தியை கேள்விப்பட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மீண்டும் அவர்களை பற்றி செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதால், மக்கள் என்னடா நடக்குது என்று அதிர்ந்து போய் இருக்கிறார்கள். அப்படி என்னப்பா செய்தி என்கிறீர்களா.. வாருங்கள் பார்ப்போம்.

ரஷ்யாவைச் சேர்ந்த மெரினா பால்மாஷேவா மிகவும் அதிரடியான செயலுக்கு பெயர் போனவர். இவர் தான் கடந்த 2020ம் ஆண்டு 21 வயதாக இருந்த தனது வளர்ப்பு மகனான விளாடிமிர் 'வோவா' ஷாவிரினை திருமணம் செய்து கொண்டார். முன்னதாக வளர்ப்பு மகனை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது கணவரை விட்டு அவர் பிரிந்தார் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

மெரினா பால்மாஷேவா விளாடிமிருக்கு ஏழு வயதாக இருக்கும் போதே விளாடிமிரின் தந்தை அலெக்ஸி ஷவிரினை திருமணம் செய்தார். மெரினா, தனது கணவர் அலெக்ஸி உடன் இணைந்து பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். இந்நிலையில் கடந்த 10 வருடம் அலெக்ஸி உடன் வாழ்ந்து வந்த மெரினா, தனது கணவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தனது வளர்ப்பு மகனான விளாடிமிரை திருமணம் செய்தார்.

இது எப்படி நடந்தது என்றால், மெரினா பால்மாஷேவா தனது வளர்ப்பு மகனான விளாடிமிரை காதலிக்கத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தில் இருந்து விடுமுறைக்காக விளாடிமிர் வீடு திரும்பிய போது, தனது மகன் என்றும் பாராமல் மெரினா காதலில் விழுந்துள்ளார். இருவருக்கும் இடையே கல்லூரி விடுமுறை காலங்களில் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்தே அலெக்ஸி தனது மனைவி மெரினாவை விவாகரத்து செய்தார். இதையடுத்து காதலில் இருந்த இவர்கள் 2020ல் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்தனர்.

திருமணத்திற்கு பின்னர் மெரினா பால்மாஷேவா மற்றும் அவரது வளர்ப்பு மகன் விளாடிமிர் 2021 இல் ஒரு பெண் குழந்தையை வரவேற்று இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் பதிவிட்டனர். தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் 2022 இல், மெரினா பால்மாஷேவா மற்றும் விளாடிமிர் மீண்டும் பெற்றோராகினர். மீண்டும் குழந்தைக்கு தாயாகி உள்ளார் மெரினா..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+