சவுதியில் புனித நூலான குர்ஆனை கிழித்து ஷூவால் அடித்தவருக்கு மரண தண்டனை

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை கிழித்து அதை காலணியால் அடித்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஹபர் அல் பாதின் நகரில் இருக்கும் நீதிமன்றம் ஒன்று இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆனை கிழித்து அதை காலணியால் அடித்த ஒரு முஸ்லீமுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

அந்த நபர் தனது செயல்களை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கடவுள், நபிகள் நாயகம், அவர்களின் மகன் பாத்திமா ஆகியோரை நிந்திக்கிறார். மேலும் அவர் குர்ஆனை கிழித்துப் போட்டு அதை தனது காலணியால் அடிக்கிறார்.

Saudi Arabian court orders beheading of man for tearing up Koran and hitting it with shoe

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதியில் கொலை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தொடர்பு, கடவுளை நிந்திப்பது ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மரண தண்டனை என்றால் எங்கோ ஒரு அறையில் வைத்து தூக்கிலிடுவது அல்ல. மாறாக பொது இடத்தில் மக்கள் முன்பு தண்டனை விதிக்கப்பட்ட நபரின் தலையை துண்டித்து கொல்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+