Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒட்டகத்திற்கு முத்தம் தந்த மருமகள்... டைவர்ஸ் பண்ணச் சொல்லும் மாமனார்.. சவுதியில்!

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவூதி அரேபியாவில் ஒட்டகத்திற்கு முத்தம் கொடுத்த மனைவியை விவாகரத்து செய்யுமாறு தனது மகனை அவரது தந்தை வற்புறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் ரியாத்திற்கு மேற்கே வசித்து வருகிறது இந்தக் குடும்பம். சம்பவத்தன்று ஒட்டகம் ஒன்றிற்கு இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முத்தமிட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் வீட்டார் அப்பெண்ணை கண்டித்துள்ளனர்.

Saudi man's family calls for divorce after wife kisses camel

தனது மருமகள் மத மற்றும் சமூக பாரம்பரியத்தை மீறி விட்டதாக அவரது மாமனார் கொந்தளித்துள்ளார். தனது மகனையும், உடனடியாக உனது மனைவியை விவாகரத்து செய் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறாராம்.

அதோடு, திருமணத்தின் போது அப்பெண் கொண்டுவந்த சீர் பொருட்களோடு, அவரையும் அவரது அம்மா வீட்டிற்கு திருப்பி அனுப்பி விட்டனர்.

ஆனால் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அந்த ஒட்டகம் குட்டி போட்டதை அறிந்து அன்பாகத்தான் முத்தமிட்டதாகவும் அப்பெண் கணவரிடம் கூறியுள்ளார். இதனால் முதலில் தனது மனைவியைப் பிரிய நினைத்திருந்த அந்தக் கணவர் தற்போது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.

அதேசமயம், தான் இன்னும் குழந்தை பெற இயலாத நிலையில் இருப்பால் இதை சாக்காக வைத்து தன்னை தனது கணவரிடமிருந்து பிரித்து விட தனது மாமியார் முயல்வதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறும் அப்பெண், மாமியார் இணைந்து வாழ முடியாது என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு எனது கணவரைப் பிடிக்கும். அவருடன்தான் இருப்பேன். ஆனால் எனது மாமியாருடன் இருக்க முடியாது" என்றார்.

இப்போது அப்பெண்ணின் வீட்டுக்கே அதாவது தனது மாமனார் வீட்டுக்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக அக்கணவர் வாழ்ந்து வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+