மீனவர்களை கண்காணிக்க படகுகளில் அரசு அதிகாரிகள் நியமனம்.. லட்சத்தீவில் பகீர் சட்டம்.. மக்கள் கொதிப்பு
லட்சத்தீவு: லட்சத்தீவில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் செல்ல வேண்டும், உளவு தகவல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்று லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல் அறிவித்துள்ளார்.
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து கொடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாட்டிறைச்சி தடை தொடங்கி குண்டர் சட்டம் வரை அங்கு மக்களுக்கு எதிரான கொடுமையான சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
குஜராத்தை சேர்ந்த பிரபுல் கோடா பட்டேல் பாஜகவை சேர்ந்தவர். குஜராத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். லட்சத்தீவு சட்டதிட்டங்களை வகுக்க கூடிய அதன் நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.

கொதிப்பு
இவரின் நியமனத்தில் இருந்தே அமைதியாக இருந்த லட்சத்தீவு தற்போது கொதித்துக்கொண்டு இருக்கிறது. இவர் அங்கு நிர்வாக பொறுப்பை எடுத்ததில் இருந்தே மலையாளிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இவரின் செயல்பாட்டுக்கு எதிராக மொத்த கேரளாவும் கொதித்து போய் இருக்கிறது.

கேரளா
முதலாவதாக லட்சத்தீவு கப்பல்கள், போட்கள் எதுவும் கேரளாவின் பேய்ப்பூர் துறைமுகத்திற்கு செல்ல கூடாது, மாறாக கர்நாடகாவில் உள்ள மங்களூர் துறைமுகம்தான் செல்ல வேண்டும் என்று பிரபுல் கோடா பட்டேல் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது லட்சத்தீவில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் செல்ல வேண்டும், உளவு தகவல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்று பிரபுல் கோடா பட்டேல் அறிவித்துள்ளார்.

ஏன்
பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இந்த உத்தரவு போட்டுள்ளார். எல்லா போட்களிலும் அதிகாரிகள் இருக்க வேண்டும். அதேபோல் துறைமுகத்தின் எல்லா பக்கங்களிலும் கேமராக்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்களை அச்சுறுத்தும் வகையில், முக்கியமாக இஸ்லாமிய மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பிரபுல் கோடா பட்டேல் இந்த உத்தரவை போட்டுள்ளார்.

கொதிப்பு
மீனவர்கள் மத்தியில் இந்த சட்டம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களை தீவிரவாதிகள் போல பிரபுல் கேகோடா பட்டேல் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது போக தேங்காய் மற்றும் தென்னைமரம் தொடர்பான குப்பைகளை அறிவியல் முறைப்படி புதைக்க வேண்டும், அல்லது கொட்ட வேண்டும். மீறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தூய்மை
தூய்மையை மீறும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரபுல் கே பட்டேல் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரசை சேர்ந்தலட்சத்தீவு எம்பி முகமது பைசல் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான, சாத்தியமே இல்லாத, மக்களை அவமதிக்கும் சட்டம் என்று விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications