"ஷின் சோ அபேவை காப்பாற்ற.. அனைத்தையும் செய்கிறோம், ஆனால்.." கலங்கிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா
டோக்கியோ: துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உடல்நிலை குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷின் சோ அபே. உடல்நலக் குறைவு காரணமாக இவர் கடந்த 2020இல் பதவி விலகினார்.
இருப்பினும், இவர் தனது கட்சிக்காக அவ்வப்போது பிரசாரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார். அப்படி தான் நாரா பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே பிரசாரம் செய்து கொண்டு இருந்தார்.

துப்பாக்கிச் சூடு
அந்தச் சமயத்தில் திடீரென ஷின் சோ அபே திடீரென சுருண்டு விழுந்தார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில், அவர் மார்பு பகுதிகள் குண்டுகள் பாய்ந்தது. இதையடுத்து ஷின் சோ அபே உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், உயிரிழந்துவிட்டதாகவும் கூட தகவல் வெளியானது.

தீவிர சிகிச்சை
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்துள்ள ஷின் சோ அபே, விரைவில் நல்லபடியாகக் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஜப்பான் ஷின் சோ அபே உடல்நிலை குறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஷின் சோ அபே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஃபுமியோ கிஷோடா தெரிவித்தார்.

பிரதமர் விளக்கம்
இது குறித்து தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, "முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். அவர் உயிர் பிழைப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். இன்னும் சற்று நேரத்தில் ஷின் சோ அபே உடல்நிலை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவர் கைது
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர், தப்பிச் செல்ல முயன்ற டெட்சுயா யமகாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து துப்பாக்கியையும் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications