"மாஜி"க்கு ஜெயில்.. கொந்தளித்த மக்கள்.. வெடித்தது போராட்டம்.. துப்பாக்கியை கையில் எடுத்த ராணுவம்..!
முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது
கேப்டவுன், (தென் ஆப்ரிக்கா): மாஜி அதிபருக்கு சிறை தண்டனை என்றதுமே, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கிவிட்டனர்.. கலவரம் வெடித்துள்ளது.. இதனால் தென்ஆப்பிரிக்காவே பதற்றத்தில் உள்ளது..
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா... 2009ம் ஆண்டு முதல் 2018ம் வரை ஆட்சி செய்தவர்.. ஆனால், இவர் தன்னுடைய ஆட்சியில் ஊழல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது..
இது தொடர்பான வழக்கும் தென் ஆப்ரிக்க நாட்டின் சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. ஆனால், இது தொடர்பான விசாரணைக்கும் ஆஜராகாமலேயே இருந்தார்..

கோர்ட் உத்தரவு
எனவே, கோர்ட் உத்தரவை இவர் மீறிவிட்டதாக 15 மாதங்கள் ஜெயில் தண்டனையை சுப்ரீம் கோர்ட் விதித்தது.. அதுமட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டம், கோர்ட் துணை தலைமை நீதிபதி ரேமண்ட் சோண்டோ தலைமையிலான விசாரணை ஆணையத்துடன், ஜூமா சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

முதல்முறை
எனவே, நகண்ட்லா அல்லது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு ஸ்டேஷனில் ஜூமா சரணடைய வேண்டும் என்றும் கோர்ட் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.. ஒரு அதிபருக்கு இப்படி சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுதான் முதல்முறை.

விளக்கம்
ஆனால், தான் தவறு செய்யவில்லை என்று ஜூமா சொல்லி கொண்டே இருந்தார்... பொதுமக்களுக்கு ஒரு கடிதமும் வெளியிட்டிருந்தார்.. அதில், "விசாரணை ஆணைய தலைவர் சோண்டோ தனக்கு எதிரானவர் என்றும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகள் அரசியல் நோக்கம் கொண்டவை" என்றும் அதில் தெளிவுபடுத்தி இருந்தார்.

வன்முறை
ஜூமாவுக்கு 15 மாத சிறைத்தண்டனை என்றதுமே அவரது ஆதரவாளர்கள் அவரை விடுவிக்க வலியுறுத்தி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்... போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அங்குள்ள கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.. வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகின்றன.. இதனால் அப்பாவி மக்கள் பலரும் இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்... இதைவிட உச்சக்கட்டமாக, கைக்குழந்தைகளையும் அந்த கும்பல் தூக்கி சென்றுவிடுகிறது.. கடைகளுக்குள் புகுந்து அராஜகம் செய்து வருகின்றன.

ராணுவம்
இந்த வன்முறை சம்பவங்களில் க்வாஜூலூ-நேட்டல் மற்றும் காவ்டெங் மாகாணங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் இறந்துவிட்டனர்.. இதனால், பாதிக்கப்பட்ட பகுதியில் ராணுவம் வந்து இறங்கி உள்ளது.. போராட்டக்காரர்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.. அதனால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டு வருவதால், பெரும் பரபரப்பு சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications