"அதிர்ச்சி வைத்தியம்"..வடகொரியாவுக்கு பதிலடி..8 ஏவுகணைகளை சோதனை செய்த தென் கொரியா
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியோல்: வடகொரியா இன்று 8 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளதாகத் தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒன்றிணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சியில் நான்காண்டுகளில் முதன்முறையாக, அமெரிக்கப் போர் விமானங்களை ஏந்திச் செல்லும் கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவுக்கு அருகே அந்த 3 நாள் பயிற்சி நடத்தப்பட்டது.
அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்தும் கூட்டுப் பயிற்சிகள், போருக்கு ஒத்திகை பார்ப்பதற்குச் சமம் என்று வட கொரியா பலமுறை சாடியிருக்கிறது. இந்த நிலையில் வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.
Recommended Video

கண்காணிப்பு அதிகரிப்பு
நேற்று ஒரே நாளில் 8 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது. தலைநகர் பியாங்யாங் அருகேயுள்ள சுனான் பகுதியில் இருந்து 35 நிமிடங்களில் இந்த ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய கூட்டுப்படைத்தலைவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த ஏவுகணைகள் எவ்வளவு தொலைவுக்கு பறந்தன என்பதை தென் கொரிய ராணுவம் தெரிவிக்கவில்லை. ஆனால் வடகொரியா அதிகளவிலான ஏவுகணைகளை ஏவுவதால், அந்த நாட்டின் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.

அதிர்ச்சி வைத்தியம்
அமெரிக்காவின் விமானம்தாங்கி போர்க்கப்பல் ரொனால்டு ரீகன், பிலிப்பைன்ஸ் கடலில் தென்கொரியாவுடன் 3 நாள் கூட்டு போர் பயிற்சியை நடத்தி முடித்து ஒரு நாள் ஆன நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை வடகொரியா எடுத்திருப்பது அதிரவைப்பதாக அமைந்துள்ளது. தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

8 ஏவுகணைகள் சோதனை
இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியா பதிலடி
அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications