மனிதர்களை ‘அப்படியே’ கடித்து தின்ன விரும்பிய அமெரிக்க இளைஞர் கைது
அமெரிக்காவில் கணவன் - மனைவியைக் கொன்று அவர்களின் மனிதர்களின் முகத்தைக் கடித்துத் தின்றதாக மாணவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ப்ளோரிடா: அமெரிக்காவில் மனிதர்களின் முகத்தைக் கடித்துத் தின்னும் வினோத கொலையாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆஸ்டின் ஹரூப் என்ற 19 வயது மாணவர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் மேற்கு பால்ம் கடற்கரையில், ஸ்டீவன் மற்றும் அவரது மனைவி மிஸ்கான் என்பவர்களின் முகத்தைக் கடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர்களின் முகத்தில் இருந்த தசைகளைக் கடித்துத் தின்று கொண்டிருப்பதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த போலீசார் ஆஸ்டினைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின் கூறுயதாக போலீசார் தெரிவித்திருப்பதாவது, 'தனக்கு மனிதனை அப்படியே கடித்து தின்ன வேண்டும் என ஆசையாக உள்ளதாகவும், போலீசார் வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியதால் அன்றைய தினம் அவர்களை தின்பதை நிறுத்தியதாகவும், இல்லையெனில் அவர்களை விரும்பியபடி தின்று இருப்பேன்' என்று கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications