நைஜீரியாவில் ஷியா முஸ்லீம்களின் பேரணியில் தற்கொலைப் படை தாக்குதல்: 21 பேர் பலி
டாகாசோயி: வட ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயடைந்தனர்.
வடக்கு நைஜீரியாவின் கனோ நகரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரமாத்தில் ஷியா முஸ்லீம்களின் பேரணி நடைபெற்றது. அப்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். வெடிகுண்டுகளுடன் வந்த மர்மநபர் பேரணிக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். தங்கள் ஊர்வலத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக பேரணியை தலைமை தாங்கி நடத்திய முகமது தூரி கூறினார்.
மேலும், "இந்த தாக்குதல் எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. நாடு முழுவதும் இதே நிலைமை தான் நிலவி வருகிறது." என்றும் முகமது தூரி தெரிவித்தார். இந்த தாக்குதலை சன்னி பிரிவு போராளி குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என அவர்கள் குற்றம்சாட்டினர். பிரிவினர் நடத்தி
நைஜீரியாவில் கடந்த ஜீன் மாதம் 10 வயது சிறுமி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டவர்களை கடத்திச் செல்லும் போகோ ஹரம் தீவிரவாதிகள், பாலியல் அடிமைகளாகவும், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும் உபயோகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications