தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. 15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.. சிரியாவில் கொடூரம்!
டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகரில் உள்ள தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மார் எலியாஸ் என்பவர் தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்த ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊடக தகவல்களின் படி, 15 பேர் உயிரிழந்த நிலையில் இதில் குழந்தைகளும் இறந்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களும், அவசர உதவிக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் சிரியாவில் நிகழ்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். சிரியா அதிபர் அஹ்மத் அல்-ஷாரா நாடு தழுவிய கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதற்கு மத்தியில் அங்கு தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தலைதூக்கக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன. இத்தகய சூழலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications