சீனாவில் புது பிரச்சனை.. அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸ் நோயாளிகள்.. வேகமாக பரவுவதால் அச்சம்

Subscribe to Oneindia Tamil

ஷாங்காய்: சீனாவில் அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸை சுமந்து கொண்டு எண்ணில் அடங்கா மக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் என்பதை அறியாமல் இன்னமும் பலருக்கு பரப்பக்கூடும் என்ற கவலை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Recommended Video

    கொரோனாவை அடுத்து சீனாவில் ஹண்டா வைரஸ்... உண்மை என்ன?

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 81 218 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3281 பேர் இறந்ததாகவும் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் உலக சுகாதார மையத்திற்கு செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

    சீனாவில் அண்மைக்காலமாக யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பரவவில்லை என்று தெரிவித்துள்ள சீனா, முற்றிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக கூறிவருகிறது. இன்று முதல் கொரோனா அதிகம் பாதித்த ஹுபே மாகாணத்தில் பயணக்கட்டுப்பாடுகளையும் இரண்டு மாதத்திற்கு பிறகு விலக்கி உள்ளது. ஆனால் வுகானில் மட்டும் ஏப்ரல் 8ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது.

    அறிகுறி இல்லா நோயாளிகள்

    அறிகுறி இல்லா நோயாளிகள்

    ஆனால் லாக் டவுனை ரிலீஸ் செய்வது ஆயிரக்கணக்கான தொற்று நோய் உள்ள மக்களை மீண்டும் மக்களோடு மக்களாக அவர்களை கலக்க வைத்து விடும் என்ற கவலைகள் உள்ளன. ஏனெனில் அந்நாட்டில் பல்லாயிரம் மக்கள் கொரோனா வைரஸ் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா வைரஸை சுமந்து கொண்டிருப்தாகவும், நோய் முற்றிய பிறகே தெரியவருவதாகவும் இதற்கு asymptomatic carriers (அறிகுறியற்ற நோயாளிகள்) என்று ஆங்கிலத்தில் பெயர் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    மிகவும் கடினம்

    மிகவும் கடினம்

    அறிகுறி இல்லாத கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு பெரிய சவாலை முன்வைக்கின்றன, இதனால் பரவுவதைக் கண்டறிவதும், தடுத்து நிறுத்துவதும் கடினம் என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி அறிகுறியே இல்லாமல் சீனாவில் ஏராளமானோர் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சீனாவில் எத்தனை பேருக்கு

    சீனாவில் எத்தனை பேருக்கு

    சீனாவில், அரசு வெளியிட்ட அறிவிப்பில் 81000 பேருக்குத்தான் கொரோனா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசால் வெளியிடப்படாத ஆவணங்களை தென் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி, சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அறிகுறிகளே இல்லாமல் கொரோனா வைரஸை சுமந்து கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    தொடர்பு தடமறிதல்

    தொடர்பு தடமறிதல்

    சீனாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிய அவர் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் இருந்தாரா என்பதை அறியும் "தொடர்பு தடமறிதல்" ("contact tracing") என்ற முறையில் அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து அவருக்கு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சில நாட்கள் கழித்து சீனா சோதனை செய்து கொரோனாவை கண்டுபிடித்து வருகிறது. இதுதான் சீனாவில் தற்போது கொரோனாவை கண்டுபிடிக்க பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.

    பரப்ப மாட்டார்கள்

    பரப்ப மாட்டார்கள்

    இந்த நடைமுறையை சுட்டிக்காட்டி மருத்துவ ஆலோசனை மாநாட்டில் நோய் அறிகுறி மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் வு ஜுன்யோ கூறுகையில், "எங்கள் தொடர்புத் தடத்தின் போது அறிகுறியற்ற நோயாளிகள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். "எனவே அவர்கள் யாருக்கும் பரப்ப முடியுமா? அவர்களால் நிச்சயம் முடியாது." என்று கூறி அறிகுறியற்ற நோயாளிகள் குறித்த பிரச்சனைக்கு விளக்கம் அளித்தார்.

    தவறான பிம்பம்

    தவறான பிம்பம்

    எனினும் அறிகுறியற்ற நோயாளிகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ தரவுகளில் சீனா சேர்க்கத் தவறியது அந்நாட்டின் வெளிப்படைத்தன்மைக்கான உறுதிப்பாட்டைப் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது, மேலும் சீனாவின் இந்த செயல், தொற்றுநோய் எவ்வாறு பரவுகிறது மற்றும் அது கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லையா என்பது பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கக்கூடும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    அறிகுறி இல்லா நோயாளி

    அறிகுறி இல்லா நோயாளி

    மார்ச் 18 முதல் மார்ச் 22 வரை புதிய தொற்றுநோய்கள் இல்லை என பதிவு செய்த போதிலும், கோவிட் -19 ஹாட்ஸ்பாட் நகரமான வுஹானில் மார்ச் 20 அன்று ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது., புதிதாக கண்டறியப்பட்ட இந்த வழக்கு அதிகாரப்பூர்வ தகவல்களில் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் நோயாளி, ஜாங் என்ற 62 வயது முதியவருக்கு எந்த அறிகுறியும் காட்டவில்லை.

    சேர்த்துவிடுவோம்

    சேர்த்துவிடுவோம்

    இதற்கு விளக்கம் அளித்துள்ள சீனா. அறிகுறியற்ற நோயாளிகள் பின்னர் ஒரு கட்டத்தில் அறிகுறிகளைக் காட்டினால் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறுகிறது. ஆனால் எத்தனை அறிகுறி வழக்குகள் கண்டறியப்படாமல் உள்ளன என்பது பற்றி உத்தரவாதமளிக்கப்படவில்லை. இந்த சூழலில் சீனாவில் லாக்டவுன் இன்று முதல் திரும்பபெற்றுள்ளது. இதனால் கண்டறியப்படாத, அறிகுறியற்ற நோயாளிகள் வெளியே சுற்றினால் புதிய பிரச்சனையை அது உருவாக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+