Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாய்ந்து வந்து தாக்கிய இஸ்ரேல் ஏவுகணை.. நேரலையில் அலறி ஓடிய தொகுப்பாளர்! சிரியாவில் திடீர் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: மத்தியக் கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் வெடித்து இருக்கிறது. அங்கு இஸ்ரேல் கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றி தன்னை எதிர்க்கும் நாடுகள் அல்லது தீவிரவாத குழுக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹவுதி, ஹமாஸ் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது சிரியா மீதும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே அங்குச் செய்தி சேனல் வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட போது பெண் தொகுப்பாளர் ஒருவர் நேரலையிலேயே பயந்து ஓடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மத்தியக் கிழக்கில் கடந்த மாதம் தான் இஸ்ரேல் ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடித்திருந்தது. 12 நாட்கள் இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்ட. அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே இஸ்ரேல் இப்போது தனது பார்வையை சிரியா பக்கம் திருப்பியுள்ளது. சிரியா மீது இஸ்ரேல் இப்போது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. அங்குத் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

Syrian TV Anchor Flees Mid-Broadcast as Israel Strikes Damascus State TV

அலறிய தொகுப்பாளர்

நேற்றைய தினம் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டிவி கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது நேரலையில் செய்தி கொடுத்துக்கொண்டு இருந்த பெண் தொகுப்பாளர் ஒருவர் தாக்குதலால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற வேண்டி இருந்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

அதில் பெண் தொகுப்பாளர் ஒருவர் செய்திகளை வாசித்து வருகிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு ஏவுகணை அருகே உள்ள கட்டிடத்தைத் தாக்குகிறது. இதனால் டிவி சேனல் கட்டிடமும் குலுங்குகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தத் தொகுப்பாளர் அப்படியே பயத்தில் நேரலையில் இருந்து ஓடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவுகிறது.

இஸ்ரேல் திட்டவட்டம்

சிரியா மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரியாவுக்கு பல எச்சரிக்கைகள் கொடுத்துவிட்டன. எச்சரிக்கைகளுக்கான காலம் முடிந்துவிட்டன.. இப்போது வேதனை தரும் அடிகள் விழும்" என்று கூறினார். மேலும், தெற்கு சிரியாவின் சுவைடாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னணி இதுதான்

அங்குச் சிறுபான்மை துருஸ் சமூகத்திற்கும் பிற ஆயுதக் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் துருஸ் சமூகத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் தலையிட்டு இருக்கிறது. சிரியாவில் இருக்கும் துருஸ் சமூகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்

முன்னதாக நேற்று புதன்கிழமை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "சிரியா படைகள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். ஏற்கனவே பல முறை எச்சரிக்கை கொடுத்தாகிவிட்டது. கொடுத்த செய்தி புரியவில்லை என்றால் தாக்குதல்கள் அதிகரிக்கவே செய்யும்" என்றார்.

சிரியா படைகள்

அதேபோல பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த விவகாரத்தில் நேரடியாகவே தலையிட்டு இருக்கிறாராம். சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் இருந்து சிரியா படைகள் வெளியேற வேண்டும் எனக் கூறியுள்ள பிரதமர் நெதன்யாகு, துருஸ் உள்ளூர் மக்களைப் பாதுகாக்கும் கடமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது இஸ்ரேல் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. முன்னதாக டமாஸ்கஸ் மையத்தில் உள்ள சிரியாவின் பாதுகாப்பு அமைச்சக கட்டிடமும் விமானத் தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+