Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்துக்கள் நிலம் இந்துக்களுக்கே.." தலிபான் அரசு எடுத்த அதிரடி முடிவு.. உற்று பார்க்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் இப்போது தலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்து மற்றும் சீக்கியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தை தலிபான் தரப்பு மீண்டும் திருப்பி அளிக்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் இருந்த வரை அவர்கள் ஆதரவுடன் ஒரு ஆட்சி நடைபெற்று வந்தது. இருப்பினும், அமெரிக்கப் படைகள் கடந்த 2021ல் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்தது. இந்த முடிவு ஆப்கன் அரசியலை மொத்தமாக மாற்றியது.

Taliban is returning all private land to Hindu Sikh minorities in Afghanistan

அமெரிக்கப் படைகள் வெளியேறிய சில வாரங்களிலேயே ஆப்கனை மீண்டும் தலிபான்கள கைப்பற்றினர். இப்போது அங்கே தலிபான் ஆட்சியே நடந்து வரும் நிலையில், அங்கு சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்துக்களின் நிலம்: அதாவது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பினர் முந்தைய ஆட்சியாளர்கள் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினரிடம் இருந்து கைப்பற்றிய நிலங்களை மீண்டும் அவர்களுக்கே திரும்பி அளிக்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளனர். தலிபான்கள் அங்கே ஆட்சியைப் பிடிக்கும் முன்பு அமெரிக்கா ஆதரவுடன் அஷ்ரப் கனி அதிபராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்த நிலம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது

இது தொடர்பாக தலிபான் அதிகாரிகள் கூறுகையில், "நீண்ட காலமாக இடம்பெயர்வு செய்த மற்றும் ஓரங்கட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் மத சிறுபான்மையினர் அனுபவிக்கும் அநீதிகளைச் சரி செய்வதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமானதாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார். இந்திய அதிகாரிகளும் இதை ஒரு பாசிட்டிவ் நடவடிக்கையாகவே கருதுகிறார்கள்.

தலிபான்: தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் இது குறித்து மேலும் கூறுகையில், "முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாக அபகரித்த அனைத்து சொத்துக்களையும் அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தர நீதி அமைச்சர் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்துள்ளோம். அதேபோல தலிபான் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு நாட்டில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான நரேந்தர் சிங் கல்சாவும் இப்போது ஆப்கனுக்கு திரும்பி இருக்கிறார்." என்றார்.

சிறுபான்மையினர்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த போது அச்சம் காரணமாகப் பல சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் நாட்டை விட்டு வெளியேறினர், இதில் நரேந்தர் சிங் கல்சாவும் முக்கியமானவர். அவர் கடந்த ஆகஸ்ட் 2021இல் இந்திய விமானப்படையால் வெளியேற்றப்பட்ட நபர் ஆவர். நரேந்திர் சிங் முதலில் சில காலம் டெல்லியில் தங்கிய நிலையில், அதன் பிறகு கனடாவுக்குச் சென்றார். இந்தச் சூழலில் தான் அவர் மீண்டும் கனடாவுக்கே திரும்பி இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் இப்போது இருக்கும் தலிபான் அரசை இதுவரை பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.. இந்தியாவும் கூட அவர்களை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மெல்ல இப்போது சீரடைய ஆரம்பித்துள்ளது. அதில் இந்து மற்றும் சிறுபான்மையினரின் நிலத்தைத் திரும்பத் தருவது முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா: கடந்த மார்ச் மாதம் வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் பிரிவு இணைச் செயலர் ஜே.பி. சிங், ஆப்கன் காபூலுக்குச் சென்று தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை சந்தித்துக் கலந்துரையாடினார்.. அதில் அவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினர்.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கே இஸ்லாமியர்களால் தான் பெரும்பான்மை அளவில் இருக்கிறார்கள் என்ற போதிலும் அங்கே இந்து மற்றும் சீக்கிய சமூகங்கள் அந்நாட்டின் வரலாற்றில் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்து வருகின்றனர். வரலாற்று ரீதியாக ஆப்கன் மக்கள்தொகையில் இவர்கள் 1% ஆக இருந்துள்ளனர். இருப்பினும், 1970, 1980களில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் அவர்களை மிகக் கடுமையாகப் பாதித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+