சரண்டர் ஆகுங்கள்.. எச்சரித்த தாலிபான்.. ஆப்கான் ராணுவ மேஜர்கள் 22 பேர் சுட்டுக்கொலை.. ஷாக் வீடியோ!
காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஆப்கான் படை மேஜர்கள் 22 பேரை தாலிபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே 80% அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் மீதம் உள்ள படைகளும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும் என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களுடன் செய்த ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க படைகள் வெளியேறி வருகிறது. அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபான் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது.

250
ஆப்கானிஸ்தானில் உள்ள 250க்கும் அதிகமான மாவட்டங்களை தாலிபான் இதுவரை கைப்பற்றி உள்ளது. மீதமுள்ள மாவட்டங்களை விரைவில் தாலிபான் கைப்பற்றும் நிலை உள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் மாவட்டங்கள் 85% தற்போது தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது. பெரும்பாலும் இன்று இரவே தாலிபான் கந்தகாரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

சரண்டர்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றுள்ள நிலையில், அங்கு ஆப்கானிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண்டர் ஆக தொடங்கி உள்ளன. தாலிபான்களின் மூர்க்கத்தனமான படைகளிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கான் படைகள் ஆயிரக்கணக்கில் தாலிபான்களிடம் சரண்டர் ஆகி வருகிறார்கள். ஆப்கான் படைகளிடம் இருந்து தற்போது தாலிபான்கள் ஆயுதங்களையும், அமெரிக்கா விட்டு சென்ற குண்டுகளையும் கைப்பற்றி வருகிறது.

ஆயுதம்
இந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கான் படைகளை சுட்டுக்கொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. கந்தகார் அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் நேற்று தாலிபான்களுக்கும் ஆப்கான் படைகளுக்கும் இடையில் மோதல் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் மேஜர், கர்னல் ரேங்க் கொண்ட அதிகாரிகள் 22 பேர் தாலிபான் படைகளுக்கு எதிராக மோதினார்கள்.

காலியானது
2 மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நடந்ததில், இறுதியில் ஆப்கான் படைகளின் குண்டுகள் தீர்ந்து போனது. இதையடுத்து ஆப்கான் படைகளிடம் சரண்டர் ஆகும்படி தாலிபான்கள் உத்தரவிட்டது. 22 ராணுவ உயர் அதிகாரிகளும் கையை தூக்கியபடி சரண்டர் ஆன நிலையில், உடனே அவர்களை தாலிபான்கள் சுட்டு கொன்றுள்ளனர். சரண்டர் ஆக ஒப்புக்கொண்ட வீரர்களை தாலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

வீடியோ
சுராப் ஹசி சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ மேஜர்களில் ஒருவர். இவர் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ தலைமை ஜெனரல் ஹசிர் ஆசிமியின் மகன். சுராப் ஹசி அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர். ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார். ஆப்கானின் எதிர்கால ராணுவ ஜெனரலாகும் வாய்ப்பு இவருக்கு இருந்தது.

வைரல்
அடுத்த வாரம் அமெரிக்க காதலியை இவர் திருமணம் செய்ய இருந்த நிலையில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் படையிடம் இருந்து விமானம் வழியாக பாதுகாப்பு உதவிகள் கிடைக்கும் என்று இவர் காத்திருந்த போது தாலிபான் படைகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட்டார்.

மக்கள்
இதில் ஆப்கான் படைகள் தாலிபான்களிடம் சரண்டர் ஆன பின்பும் கூட கொல்லப்படுகிறார்கள். 22 வீரர்களும் இப்படி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதால் இப்படி தாலிபான்கள் ஆப்கான் வீரர்களை சுட்டுக்கொல்கிறார்கள். ஆப்கான் படைகள் சரண்டர் ஆனால் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் உடனே தாலிபான்கள் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகின்றன.

கோபம்
சொந்த நாட்டு படையையே தாலிபான்கள் இப்படி சுட்டு வீழ்த்துவது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க படைகளுக்கு முன் அடங்கி இருந்த தாலிபான்கள் இப்படி அடாவடியில் இறங்கி இருப்பது ஆப்கானிஸ்தான் மக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்காவின் முடிவையும் உலக நாடுகள் இதனால் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

சந்தேகம்
அமெரிக்கா அவசரப்பட்டு இப்படி செய்துவிட்டது. அமெரிக்கா வெளியேறி இருக்க கூடாது. தாலிபான்கள் கொஞ்சம் கூட மாறவில்லை. 2000ல் இருந்த அதே நிலையில் மீண்டும் ஆப்கானிஸ்தானில் திரும்ப போகிறது. இது ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications