கென்யா தாக்குதல்: 137 பிணையக் கைதிகள் பலி என ஷெபாப் அறிவிப்பு: அரசு மறுப்பு
நைரோபி: கென்யா வணிக வளாகத் தாக்குதலில் சிக்கி 137 பிணையக் கைதிகள் பலியாகியுள்ளதாக தனது இணையப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஷெபாப் தீவிரவாத அமைப்பு. ஆனால், இத்தகவலை கென்ய அரசு மறுத்துள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் என்ற 4 மாடிக்கட்டிட வணிகவளாகத்திற்குள் கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 16 தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கிருந்த பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்த அத்தீவிரவாதிகள் சிலரைச் சுட்டுக் கொல்லவும் செய்தார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே கடும் மோதல் உண்டானது. இத்தாக்குதலுக்கு சோமாலிய அல்-ஷெபாப் தீவிரவாதிகள் அமைப்புப் பொறுப்பேற்றது. அங்கு நடந்த தாக்குதலில் சிக்கி பொதுமக்கள் 61 பேர், 5 தீவிரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் என மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டனர்.

கட்டுக்குள் வந்தது...
நேற்று வணிக வளாகத்தை ராணுவத்தினர் கைப்பற்றி விட்டதாகவும், தீவிரவாதிகள் கொல்லப் பட்டு விட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது கென்ய அரசு.

மோசமான நிலையில் கட்டிடம்...
ஆனால், சம்பவ இடத்தில் தொடர்ந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடித்ததால் வணிக வளாகத்தின் 3 தளம் வரை மிக மோசமாக சிதைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷவாயு தாக்குதல்....
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் தனது வலைதள செய்தியில், ‘கென்ய வணிக வளாகக் கட்டிடத்திற்குள் இருக்கும் முஜாஹிதீன்களை தோற்கடிக்க முடியாமல் கென்ய படையினர் திணறி வருகின்றனர். அவர்கள் இந்த தாக்குதலை முடிவிற்கு கொண்டுவர விஷவாயுகளை பரப்பி வருகின்றனர்.

137 பேர் பலி....
மேலும் வெடிமருந்துகளை பயன்படுத்தி அந்த வணிக வளாகத்தை அவர்கள் தகர்த்து வருகின்றனர். இதில் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 137 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளது.

அரசு மறுப்பு...
ஆனால், ஷெபாப்பின் இத்தகவலுக்கு கென்ய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேசக் கரங்கள்....
இந்நிலையில், கென்ய ராணுவத்திற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் சார்பில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளதாக தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications