For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதுங்கி இருந்து தாக்குதல்! ஜப்பான் மாஜி பிரதமரை இரு முறை சுட்ட டெட்சுயா யமகாமி கைது! பரபர ஃபோட்டோ

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே சுடப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Japan-ல் என்ன நடந்தது? Shinzo Abe சுடப்பட்டது எப்படி? Former Prime Minister-க்கே இப்படியா | *World

    நவீன ஜப்பான் வரலாற்றில் முக்கிய பிரதமர்களில் ஒருவர் ஷின் சோ அபே. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற சிறப்பையும் பெற்றவர்.

    உத்தவ் தாக்கரேவுக்கு சோதனை மேல் சோதனை.. மேலும் 32 கவுன்சிலர்கள் ஏக்நாத் கோஷ்டியில் ஐக்கியம்! உத்தவ் தாக்கரேவுக்கு சோதனை மேல் சோதனை.. மேலும் 32 கவுன்சிலர்கள் ஏக்நாத் கோஷ்டியில் ஐக்கியம்!

    67 வயதாகும் ஷின் சோ அபே, பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நலம் மோசமானதால், மருத்துவரின் அறிவுறுத்தல் படி ஓய்வு எடுக்க முடிவு செய்து தனது பிரதமர் பதவியில் இருந்து அபே விலகினார்.

     ஷின் சோ அபே

    ஷின் சோ அபே

    பிரதமர் பதவியில் விலகினாலும் கூட, லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்காக அவ்வப்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அப்படி தான் ஜப்பான் நாட்டின் நாரா பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷின் சோ அபே மக்கள் முன் பேசிக் கொண்டு இருந்தார். அங்குப் பொதுமக்கள் பலர் திரண்டு இருந்தனர்.

     துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    மக்கள் முன்னிலையில் பேசிக் கொண்டு இருந்த ஷின் சோ அபே, யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென சுருண்டு விழுந்தார். அங்கு இருந்த இளைஞர் ஒருவரால் அவர் சுடப்பட்டதாகவும், மார்பு பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது. அதன் பின்னர் தான், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்ததாகவும் தகவல் வெளியானது.

     உயிரிழந்தார்

    உயிரிழந்தார்

    இதனால் அவர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஐசியு பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இந்தச் சூழலில் அபேவை சுட்ட நபர் குறித்த தகவல்களும் அவரது ஃபோட்டோவும் வெளியிடப்பட்டுள்ளது.

     டெட்சுயா யமகாமி

    டெட்சுயா யமகாமி

    இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளது. அபேவை நோக்கி அவர் இரு முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், அவரை கைது செய்தனர். மேலும், அபே சுடப்பட்ட துப்பாக்கியையும் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

     தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    தப்பிச் செல்ல முயலும் டெட்சுயா யமகாமியை பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்து கைது செய்யும் ஃபோட்டோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெட்சுயா யமகாமியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார், எதற்காக இப்படிச் செய்தார் என்பது போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    English summary
    who is the shooter of Former Japanese PM Shinzo Abe: (ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபேவை சுட்டவர் யார்) Tetsuyo Yamagami shots Former Japanese PM Shinzo Abe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X