உலகளாவிய "பெரிய ஆபத்து.." ஓமிக்ரான் வைரஸ் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. WHO முக்கிய எச்சரிக்கை
ஜெனிவா: புதிய வகை கொரோனா, ஓமிக்ரான் வேரியண்ட் உலகளவில் "மிக அதிக" ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Omicron கொரோனா வைரஸ் திரிபு, சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளது, இது "மிக அதிக" உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்துகிறது, இது சில பகுதிகளில் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இந்த திரிபு எவ்வளவு அதிகமாக பரவுகிறது மற்றும் ஆபத்தானது என்பதில் நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன என்பதையும் அது தெரிவித்துள்ளது.

கொரோனா அலை
"கோவிட்-19 இன் மற்றொரு பெரிய அலை Omicron ஆல் ஏற்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கலாம்" என்று WHO இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. அதேநேரம், இன்று வரை, Omicron வேரியண்ட்டுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

தென் ஆப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 இன் சமீபத்திய வேரியண்ட் பி.1.1.529 திரிபு, கவலைக்குரிய ஒரு கொரோனாவாக இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மேலும், அதற்கு ஓமிக்ரான் எனப் பெயரிட்டது.

உலகளவில் பிற திரிபுகள்
உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மற்றும் ஆல்பா, பீட்டா மற்றும் காமாவுக்கு அடுத்தபடியாக, அதிகம் அச்சுறுத்தும் உருமாறிய கொரோனாவாக ஓமிக்ரான் மாறியுள்ளது.

ஆய்வுகள்
உலகளாவிய கேஸ்கள் அதிகரித்துள்ளபோதிலும், ஓமிக்ரான் வைரசின் தாக்கங்கள் தொடர்பாக இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. தடுப்பூசியால் இதை கட்டுப்படுத்த முடியுமா என்பதைப் பற்றியும் ஆய்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. உலகம் முழுக்கவும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு இடம் கிடைக்காத நிலை உருவாகி விடக்கூடாது என்பதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைவான தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

இஸ்ரேல், ஜப்பான்
உலகின் பல நாடுகளும் சர்வதேச பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறது. ஜப்பான் ஒரு படி மேலே போய் வெளிநாட்டினர் யாரும் தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் இதே போன்ற அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. புதிய வைரஸ் தொடர்பான எச்சரிக்கையை அந்த நாட்டு உளவு அமைப்புகள் தெரிவித்ததன் பெயரில் தான் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை ஜப்பான் மற்றும் இஸ்ரேல் எடுத்திருக்க கூடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓமிகிரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications