Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவுடன் போருக்கு ரெடி.. போலாந்தின் அறிவிப்புக்கு காரணம் இதுதான்! வார்சா ஒப்பந்தம் நினைவிருக்கா!

Subscribe to Oneindia Tamil

வார்சா: உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை நீடித்து வரும் நிலையில், நாங்கள் ரஷ்யாவுடன் போருக்கு தயாராக இருக்கிறோம் என போலாந்து தானாக முன்வந்து அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. போலாந்து ஏன் போருக்கு தயாராக வேண்டும்? அதற்கான காரணம் என்ன? இதன் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது அதிரடியான தாக்குதலை தொடுத்தது ரஷ்யா. இந்த போருக்கு முக்கியமான காரணம் அமெரிக்காதான். 1917 தொடங்கி 1990 வரை அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது சோவியத் ரஷ்யா. சாதாரண வேளாண் துறை தொடங்கி விண்வெளி துறை வரை சோவியத் தொடாத உச்சங்களே கிடையாது. இன்னைக்கு வரைக்கும் இதனை சமன் செய்ய முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

This is the reason Poland said it was ready for war with Russia

நேட்டோ: மறுபுறம் பொருளாதார வளர்ச்சியும் அசுர வேகத்தில் இருந்தது. எனவே சோவியத்தை வீழ்த்த அமெரிக்காவும், அமெரிக்காவின் சதிகளை முறியடிக்க சோவியத்தும் பரஸ்பரம் மோதிக்கொண்டே இருந்தன. இந்த காலத்தில்தான் அமெரிக்கா நேட்டோ எனும் கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் தங்களுக்கு சாதகமான நாடுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கியது.

உடைந்த சோவியத்: ஆனால் கொஞ்ச நாட்களிலேயே சோவியத் யூனியன் உடைந்து, வெறும் ரஷ்யாவாக மாறியதால், சோவியத் காலத்தில் ரஷ்யாவின் கீழ் இருந்த நாடுகளான கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா மற்றும் அல்பேனியா ஆகியவை தனி நாடுகளாக பிரிந்தன. இதில் போலாந்து கவனிக்கப்பட வேண்டிய நாடாகும்.

போலாந்தின் வரலாறு: கடந்த 1918ல் ஜெர்மன் படை, ரஷ்யாவை நோக்கி வரும்போது போலந்தை துவம்சம் செய்துவிட்டது. ஆனால் ஜெர்மன் படைகளை ரஷ்யா தோற்கடித்துவிட்டது. எனவே, சிதைந்து இருந்த போலாந்தை ரஷ்யாவுடன் இணைத்து புதியதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் போலாந்தில் இருந்த பெரும் நிலப்பிரபுகள், பணக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவுக்கு எதிராக போரை தொடங்கினர். இந்த போர் 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர் 1921ல் போலாந்து ரஷ்யாவின் பகுதியாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

மீண்ட போலந்து: ஆனால் மேலே சொன்னதை போல 1990ல் சோவியத் ரஷ்யா உடைந்துவிட்டது. எனவே மீண்டும் போலாந்து தனி நாடாக அங்கீகாரத்தை தேடியது. அதற்கு அமெரிக்க உதவ, பதிலுக்கு போலாந்து நேட்டோவில் இணைந்தது. இப்படியாக தனி நாடுக்காக ஏங்கும் சோவியத்தின் உதிரி பகுதிகளை நேட்டோவில் சேர்த்து, தனி நாடு அந்தஸ்தை கொடுத்தது அமெரிக்கா. இந்த பட்டியலில் தற்போது வரை இணையாத நாடு பெலாரஸ் மட்டும்தான்.

காரணம்: எனவே ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையில் ஒரு லேயர் போல பெலாரஸ் செயல்பட்டது வருகிறது. அதாவது, பெலாரஸை தாண்டினால் ரஷ்யாவில் நுழைந்துவிடலாம். உக்ரைனும் இப்படித்தான் லேயராக இருந்தது. ஆனால் சமீபத்தில் நேட்டோவில் இணைய தீவிரமாக முயன்றது. எனவேதான் ரஷ்யா போரை தொடங்கியுள்ளது. இப்போது உக்ரைனுக்கு பக்கத்தில் இருப்பது போலாந்துதான். உக்ரைன் ஏறத்தாழ தோற்றுவிடும் சூழலில் இருப்பதால் அடுத்து உள்ள போலாந்துக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் போருக்கு தயார் என அறிவித்திருக்கிறது.

மட்டுமல்லாது நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவுப்படுத்த கூடாது என போலாந்து தலைநகர் 'வார்சாவில்' அமெரிக்காவை வைத்து ஒப்பந்தம் போட்டது ரஷ்யா. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி முதல் ஆளாய் அமெரிக்காவிடம் போய் நின்ற நாடுதான் போலாந்து. எனவே போலாந்து மீது ரஷ்யாவுக்கு செம கடுப்பு இருந்து வருகிறது. அதற்கேற்றார் போல, போலாந்தும் அடிக்கடி ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இது எல்லாமும் சேர்ந்து போலந்துக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், நாங்கள் போருக்கு தயார் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தற்போது கூறியுள்ளார் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+