Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேலை கலங்கடித்த ஹமாஸ் படையினர்.. இது முதல்முறை கிடையாது! இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் வரலாறு இதோ

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: இன்று காலை இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இப்படியான தாக்குதல்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. இருப்பினும் தற்போது நடைபெற்ற ஏவுகணை தாக்குதல் சம்பவம், ஏற்கெனவே நடந்த இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை நினைவுகூர்ந்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

Timeline of the past conflict between the states of Israel and Palestine

இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று காலை ஹமாஸ், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த சம்பவம் ஏற்கெனவே நடந்த இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை நினைவுக்கூர்ந்திருக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு காசாவிலிருந்து இஸ்ரேலின் படைகள் வெளியேறியுள்ளது. இதன் பின்னர் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் பாலஸ்தீன சட்டமன்றத் தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆனாலும் ஆயுத போராட்டங்களை கைவிட மறுத்ததாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்ததாலும் பாலஸ்தீனியர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்திவிட்டன.

இதே ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் படைப்பிரிவை சேர்ந்த கிலாத் ஷாலித் என்பவரை ஹமாஸ் பிரிவினர் கைது செய்தனர். இவர் 2011ம் ஆண்டுதான் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட உடன்படிக்கையையடுத்து விடுவிக்கப்பட்டார். இதே 2007ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி உள்நாட்டு போரின் மூலம் ஹமாஸ் படை கசாவை கைப்பற்றியது. இதற்கு அடுத்த ஆண்டான 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதியன்று தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனியர்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தினர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் 22 நாட்கள் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் 1,400 பாலஸ்தீனியர்கள், 13 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதியன்று ஹமாஸின் இராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலஸ்தீனம் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது. இதேபோல கடந்த 2014ம் ஆண்டு ஹமாஸ் படையினரால் 3 இஸரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இது 7 வார போருக்கு வழிவகுத்தது. இதில் கசாவில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்ரேல்-காசா எல்லையில் வேலி போட்டப்பட்டது. அதேபோல எல்லைத்தாண்டும் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இப்படியே பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170 பேர் கொல்லப்பட்டனர். இதே 2021ம் ஆண்டு ரமலான் மாதத்தில் ஜெருசலேத்தின் உள்ள அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேலிய படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்.

பின்னர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதியை குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 15 குழந்தைகள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல கடந்த ஜனவரி மாதம் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்படியாக நடைபெற்ற மோதல் சமபவங்களின் தொடர்ச்சியாகதான் இன்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஆனால் இந்த முறை ஹமாஸ் படையினைர் வலுவாக இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+