ரயில்வே கிராசிங்கில் வேன் மீது ரயில் மோதி விபத்து.. 16 சீக்கியர்கள் பலி.. பாகிஸ்தானில் பரிதாபம்!
கராச்சி: பாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற வேன் ஒன்றின் மீது ரயில் மோதியதில் 16 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் பகுதியில் அதிக அளவில் சீக்கிய மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு இருக்கும் சீக்கியர்கள் சென்ற புனித யாத்திரையின் போது அந்த அசம்பாவிதம் நடந்து உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஷெய்குபுரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெஹாலி ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ரயில்வே கிராஸ்ஸிங் ரயில் ஒன்று கடக்கும் போது வேன் ஒன்று அதில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் வேகமாக மோதிய விபத்தில், ரயிலில் இருந்து 16 சீக்கிய பயணிகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications