அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 8 வயது சிறுவன் உள்பட 80 பேர் காயம்
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் பியூனஸ் ஏர்ஸ் ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் 80 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸில் உள்ள ரயில் நிலையத்திற்குள் பயணிகள் ரயில் ஒன்று நேற்று காலை நுழைந்துள்ளது. ஆனால் பிரேக் வேலை செய்யாததால் ரயில் விபத்துக்குள்ளானது. இதில் 8 வயது சிறுவன் உள்பட 80 பேர் காயம் அடைந்தனர். ரயில் விபத்துக்குள்ளானதை பார்த்த பொது மக்கள் உடைந்த ஜன்னல் கண்ணாடி வழியாக காயம் அடைந்த டிரைவரை பார்த்து கொலைகாரன் கொலைகாரன் என்று கோஷமிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.
மேலும் அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த ஆண்டு இதே ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 52 பேர் பலியாகினர், 700 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் கடந்த ஜூன் மாதம் பயணிகள் ரயில் ஒன்று மற்றொரு ரயில் மீது மோதியதில் 3 பேர் பலியகினர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அர்ஜென்டினாவில் அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications