ஆஸி. ஆண்கள் சிறையில் திருநங்கை 2,000 முறை பாலியல் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் திருநங்கை ஒருவர் சிறையில் வைத்து 2 ஆயிரம் முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990களில் கார் திருடிய வழக்கில் கைதான அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் க்வீன்ஸ்லேண்டில் உள்ள போக்கோ ரோடு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து தண்டனை காலம் முடியும் வரை அவர் 2 ஆயிரம் முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறை தண்டனை அனுபவித்த காலத்தில் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Transgender woman inmate raped over 2,000 times in all-men Australian jail

இது குறித்து மேரி கூறுகையில்,

நான் சிறையில் இருக்கையில் 2 ஆயிரம் முறை பலாத்காரம் செய்யப்பட்டேன். திருநங்கையான என்னை ஆண்கள் சிறையில் அடைத்தனர். என்னை பெண்கள் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

சிறையில் பிற ஆண் கைதிகள் என்னை மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்தனர். என்னால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என்னை அடித்து துன்புறுத்தினர். நான் சிறையில் நரக வேதனை அனுபவித்தேன். நாங்களும் மனிதர்கள் தானே.

எங்களுக்கு பிடித்த வகையில் வாழ்வதை இந்த சமூகம் கிண்டல் செய்கிறது. எங்களுக்கு பிடித்தபடி வாழ எங்களுக்கு துணிச்சல் உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+