ரஷியா மீதான பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா
ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள கஸன் கதீட்ரல் தேவாலயம் மீது நடக்கவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ )தந்த தகவலின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்கா மற்றும் ரஷிய தலைவர்கள் கூறியுள்ளனர்.
டிரம்பை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், இதற்கு நன்றி தெரிவித்ததாக வெள்ளை மாளிகை மற்றும் கிரம்ளின் வட்டாரங்கள் உறுதி செய்தன.
சனிக்கிழமையன்று இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ரஷியா தெரிவித்தது.
தாக்குதலுக்கு முன்பே "பயங்கரவாதிகள்" பிடிபட்டதால், பலர் உயிர் தப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஏழு பேரை கைது செய்ததாக தெரிவித்த ரஷிய ஃபெடரல் பாதுகாப்பு சேவை, அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தீவிரவாத இலக்கியங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் கூறியது.
குடிமக்களை கொல்வதற்கு, தேவாலயம் முன்பு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம்
- பறக்கும் தட்டுகள்: ரகசிய விசாரணை நடத்திய அமெரிக்கா
ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான பீட்டர்ஸ்பர்கில் உள்ள தேவாலயம் மற்றும் பல பொது இடங்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்த வெடி பொருட்களை அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- குஜராத் தேர்தல்: இதுவரை நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்
- நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்
- ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைமீறல்: 102 வழக்குகள் பதிவு
- பிபிசி தமிழ் புகைப்பட போட்டி : மூன்றாவது வாரத்துக்கான தலைப்பு இதோ !
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!













Click it and Unblock the Notifications