உலகை உலுக்கிய வீடியோ.. துருக்கியில் புதைந்த மனைவி, குழந்தைகள்! கத்தி கதறி காப்பாற்ற முயன்ற தந்தை
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் மனைவியும் குழந்தைகளும் சிக்கிய நிலையில் அவர்களை தந்தை கதறி அழுது தேடும் வீடியோ வெளியாகி உள்ளது.
அன்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இடிபாடுகளில் புதைந்த தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை ஒருவர் கத்தி அழைத்து தேடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்க வைத்து இருக்கிறது.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அடுத்தடுத்து தொடர்ந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,000 ஐ நெருங்கி உள்ளது.
தொடர் நில அதிர்வுகளுக்கு மத்தியில் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை பன்னாட்டு குழுவினர் உதவியுடன் மீட்டு வருகின்றனர்.

தொடர் நிலநடுக்கம்
7.8 என்ற ரிக்டர் அளவில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கியிலும், அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அடுத்ததாக 7.5 என்ற ரிக்டர் அளவில் 2 வது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிப்பு மேலும் மோசமானது.

ஆப்டர் ஷாக்
அத்துடன் நிற்காமல் 3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி பேரழிவை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக ஆப்டர் ஷாக் எனப்படும் நில அதிர்வுகளும் பல முறை ஏற்பட்டன. இதன் தாக்கத்தால் நிலநடுக்கத்தில் வெடிப்பு ஏற்பட்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழவே உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்தன.

அதிகரித்த உயிரிழப்பு
துருக்கியையும் சிரியாவையும் உலுக்கிய இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் அண்டை நாடுகளான லெபனான் மற்றும் ஜோர்டானிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவின் நகரங்கள் கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 37,000 ஐ நெருங்கி இருக்கிறது.

துருக்கியில் 16,000 பேர் உயிரிழப்பு
நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 36,257 பேரில் துருக்கியை சேர்ந்தவர்கள் மட்டும் 31,643 பேர் என்றும், சிரியாவில் இதுவரை 4,614 பேர் நிலநடுக்கத்தால் உயிரிழந்து உள்ளதாகவும் பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
#deprem #Kahramanmaras #AFAD #Turkey #MARAS #Turkiye #tuerkiyedeprem #antepdeprem 🇹🇷 karısının ve çocuklarının enkaz altından arayan bir adam..Kurtarıcılar herkesin öldüğünü (cihazlar ve köpeklerle kontrol ettiler) ve kurtarılacak kimse olmadığını söylediler ama o buna inanmıyor pic.twitter.com/mVTNtuJQPN
— Journalist_cuneyt (@Journalistcnyt) February 13, 2023
உலகை உலுக்கிய வீடியோ
தொடர்ந்து பல இடிபாடுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதற்கு ஏராளமானோர் சிக்கி உயிரோடும், இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் துருக்கியில் ஒரு நபர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களை சொல்லி அழைத்து தேடும் வீடியோ உள்ளங்களை உலுக்கி உள்ளது. அங்கிருந்த மீட்புப்படையினர் அனைவரும் இறந்துவிட்டதாக சொன்னதை நம்பாமல் அவர் அழுதுகொண்டே தனது குடும்பத்தினரை தேடினார்.












Click it and Unblock the Notifications