யுகே-இந்தியா வாரம் 2022: டாப் அமைச்சர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி
லண்டன்: இந்தியாவுக்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே இருக்கும் உறவை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் இந்தியா குளோபல் ஃபோரம் (ஐஜிஎஃப்) சார்பில் யுகே-இந்தியா வாரம் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்பும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியா உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கான பிரிட்டன் ஏற்றுமதிகளைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கும். இது இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கு பெரும் பூஸ்ட் அளிக்கும். இந்த வர்த்தக ஒப்பந்தம் 2035ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனின் மொத்த வர்த்தகத்தை ஆண்டுக்கு 28 பில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்கும் என்றும், பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் 3 பில்லியன் பவுண்டுகள் ஊதியத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன்-இந்தியா வாரத்தில் (ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை) பரந்த அளவிலான விவாதங்களும் வர்த்தக ஒப்பந்தம் பற்றிய விவாதங்களும் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன்- இந்தியா உறவு என்பது வர்த்தகம் மற்றும் பொருளாதாரங்களைத் தாண்டியது. அவை வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் தொடுகிறது. கலாசாரம் தொடங்கி காலநிலை நடவடிக்கை, சுகாதாரம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு போன்ற முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பு வரை, இந்தியாவும் இங்கிலாந்தும் ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறது.

75 ஆண்டுக்கால இருதரப்பு உறவுகளைக் கொண்டாடும் வகையில் இந்த யுகே- இந்தியா வாரம் 2022 Reimagine@75 என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேச இருக்கும் சில முக்கிய பேச்சாளர்கள்:
ரிஷி சுனக், கருவூல சேன்சிலர், இங்கிலாந்து அரசு
டாக்டர் எஸ் ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
சஜித் ஜாவித், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான மாநிலச் செயலாளர், இங்கிலாந்து
டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், இந்தியா
தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர், இந்தியா
பூபேந்தர் யாதவ், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தியா
டாக்டர் ராஜீவ் சந்திரசேகர், இந்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்
அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
அலோக் சர்மா, தலைவர், COP 26
போஸ்கோப் பிரபு ஜெர்ரி கிரிம்ஸ்டோன், இங்கிலாந்து முதலீட்டு அமைச்சர்
அன்னே-மேரி ட்ரெவெல்யன், சர்வதேச வர்த்தகத்திற்கான வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் வர்த்தக வாரியத்தின் தலைவர், இங்கிலாந்து
பில் விண்டர்ஸ், குழு தலைமை நிர்வாகி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்
அரியானா ஹஃபிங்டன், நிறுவனர் & CEO, Thrive
ஹர்மீன் மேத்தா, தலைமை டிஜிட்டல் மற்றும் கண்டுபிடிப்பு அதிகாரி, BT
டாக்டர் சசி தரூர், திருவனந்தபுரம் எம்பி
பவிஷ் அகர்வால், ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர்
அமித் கபூர், TCS UK மற்றும் அயர்லாந்து பிரிவின் தலைவர்
சத்குரு, நிறுவனர், ஈஷா அறக்கட்டளை
முழுப் பேச்சாளர் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
IGF இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் மனோஜ் லட்வா கூறுகையில், "உலகெங்கும் நிறுவப்பட்ட கட்டமைப்புகள் சிதிலமடைகிறது. உலகளாவிய அவநம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து- இந்தியா உறவுகளின் பரஸ்பர மதிப்பு மற்றும் திறனை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
யுகே-இந்தியா வாரம் 2022 இந்த வெற்றிகரமான கூட்டணியை நினைவு கூரும் ஒரு சரியான தருணத்தில் வருகிறது. நாங்கள் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் வர்த்தக உறவுகளை மறுசீரமைப்பும் நேரத்தில் இது வருவது மற்றொரு சிறப்பு. இந்த நிகழ்வின் முக்கியத்துவம், இரு நாடுகளின் உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தும்!" என்றார்.
இந்த ஆண்டுக்கான யுகே-இந்தியா விருதுகளுக்கான ஷார்ட்லிஸ்ட்டை தெரிந்து கொள்ளலாம்..
யுகே-இந்தியா வாரம் 2022இன் முழு நிகழ்ச்சி நிரலையும் இங்குத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) பற்றி
IGF - லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட India Inc. குழுமம் தான் உங்களுடன் இந்த இந்தியா குளோபல் ஃபோரத்தை கொண்டு வருகிறது. இது சர்வதேச வணிகம் மற்றும் உலகளாவிய தலைவர்களுக்கான நிகழ்ச்சி நிரல் அமைக்கும் மன்றமாகும். சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் துறைகளின் முக்கிய நிறுனவங்கள் உடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை இது வழங்குகிறது. சர்வதேச நிகழ்வுகள் முதல் தனிப்பட்ட நிகழ்வுகள், உரையாடல்கள், நேர்காணல்கள் மற்றும் எங்கள் ஊடகங்கள் மூலம் சிந்தனை அமர்வு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications