5 ஒட்டுக்கேட்கும் "உளவு" விமானங்கள்.. வடகொரியாவுக்கு அனுப்பிய டிரம்ப்.. கிம் பற்றி விசாரிக்க பிளான்!
பியாங்யோங்: 5 அதி நவீன உளவு விமானங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியாவுக்கு அனுப்பு உள்ளார். அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அவர் இந்த விமானங்களை அனுப்பி உள்ளார்.
வடகொரியா அதிபர் அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. அவரின் உடல்நிலை குறித்து இன்னும் அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை.
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது. அவரின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகாரபூர்வமாக சொல்லவில்லை
ஆனால் கிம் ஜோங் உன் எப்படி இருக்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக வடகொரியா எதையும் அறிவிக்கவில்லை. கிம் ஜோங் உன் நலமாக இருப்பதாக தென் கொரியா மட்டும் அறிவித்துள்ளது. கிம் ஜோங் உன் கொரோனாவிற்கு பயந்து பதுங்கி இருக்கிறார் என்றும் சில தகவல்கள் வருகிறது. ஏவுகணை சோதனையின் போது அவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூட தகவல்கள் வலம் வருகிறது.

அமெரிக்கா அனுப்பி உள்ளது
இந்த நிலையில் 5 அதி நவீன உளவு விமானங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியாவுக்கு அனுப்பு உள்ளார். அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அவர் இந்த விமானங்களை அனுப்பி உள்ளார். கிம் ஜோங் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வான்சோன் பகுதியில் இந்த விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளது. டிரோன் வகை விமானமான இது ரேடாரில் சிக்காது.

எப்படி ஒட்டுக்கேட்கும்
இந்த விமானங்கள் வானத்தில் இருந்து கொண்டே ஒட்டுக்கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வானத்தில் பறந்தபடியே தரையில் நடக்கும் விஷயங்களை புகைப்படம் எடுக்கும். மிக துல்லியமாக புகைப்படம் எடுக்கும். வெப்பநிலை மூலம் புகைப்படம் எடுக்க கூடிய டெம்பரேச்சர் புகைப்பட கருவிகளும் இதில் உள்ளது. மூன்று Beechcraft RC-12 மற்றும் இரண்டு EO-5C 'Crazy Hawk' விமானங்களை அமெரிக்கா வடகொரியாவுக்கு அனுப்பி உள்ளது.

செம முக்கியம்
இந்த விமானங்கள் கீழ இருக்கும் பகுதியில் யாராவது போன் மூலம் பேசினால் அதன் எலக்ட்ரோமேக்னெட்டிக் சிக்னல்களை கண்டுபிடித்து அதை ஒட்டுக்கேட்கும் திறன் கொண்டது. மற்ற விதமான ஆன்லைன் பேச்சுவார்த்தைகளையும் கண்டுபிடித்து டிராப் செய்யும் திறன் கொண்டது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட நபரை இதன் மூலம் மிக எளிதாக டிராக் செய்ய முடியும். கிம் ஜோங் உன்னை கண்டுபிடிக்க இந்த விமானங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

அமெரிக்கா கவலை
கிம் ஜோங் உன் உடல்நிலை அமெரிக்காவிற்கு மிக முக்கியம் ஆகும். வடகொரியா அணு சக்தி கொண்டு நாடு ஆகும். அதன் அதிபர் திடீர் என்று பலியானால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலக அளவில் இது அதிர்வுகளை ஏற்படுத்தும். வடகொரியாவுடன் முழுமையாக அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்ய அமெரிக்கா முயன்று வருகிறது. இதனால் கிம் ஜோங் குறித்து உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது.












Click it and Unblock the Notifications