அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்கும் அபாயம்.. சீக்ரெட் ஆக ஈரான் செய்த காரியம்! சேட்டிலைட்டால் அம்பலம்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்த சூழலில் எந்த நேரத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவிடும் என அச்சம் இருப்பதால் ஈரான் ரகசியமாக ஒரு வேலையில் இறங்கியுள்ளது. தற்போது செயற்கைகோள் படங்களால் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது, அணுசக்தி தளங்களை பாதுகாப்பாக்கும் விதமாக பலமான கான்கிரீட் கட்டிடங்கள் அமைப்பது.. பூமிக்கு அடியில் பலம் வய்ந்த பதுங்கு குழிகளில் அணுசக்தி தளங்களை பாதுகாக்க தொடங்கி இருக்கிறதாம்.
ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. ஈரானை எந்த நேர்த்தில் அமெரிக்கா தாக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் மத்திய கிழக்கை நோக்கி போர்க்கப்பல்கள், போர் விமானங்களை நகர்த்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.

அணுசக்தி தளங்களை பாதுகாக்கும் ஈரான்
இதற்கிடையே, அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அச்சம் இருப்பதால் ஈரான் ரகசியமாக ஒரு வேலையில் இறங்கியுள்ளது. செயற்கைகோள் படங்களால் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது, அமெரிக்கா தனது அணுசக்தி தளங்களை குறிவைத்து அட்டாக் செய்யலாம் என்பதால், அவற்றை பாதுகாப்பாக்கும் விதமாக பலமான கான்கிரீட் கட்டிடங்கள் அமைப்பது.. பூமிக்கு அடியில் பலம் வய்ந்த பதுங்கு குழிகளில் அணுசக்தி தளங்களை பாதுகாக்க தொடங்கியுள்ளதாம்.
வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்ட அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தகவலின்படி, உயர்தரத் தெளிவுடைய படங்கள் மூலம் முக்கியமான தளங்களை வேகமாக புதைத்து வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. தூதரக பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், ஈரான் தனது அணுசக்தி தளங்களை பாதுகாப்பில் தீவிர அக்கறை செலுத்திவருவது புதிய கவலைகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
செயற்கைகோள் படங்கள் வெளியாகின
கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே ஈரான் இத்தகைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தென்கிழக்கு தெஹ்ரானில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பர்ஷின் ராணுவ வளாகத்தில் உள்ள இந்த தளங்களைத்தான் ஈரான் வலிமையாக்கி வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டியுள்ளன.
அதேபோல, கடந்த ஆண்டு மோதலை தொடர்ந்து பர்சின் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தியுள்ளது ஈரான். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைவிடப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கி தளத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த வார இறுதிக்குள் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும் இவ்விவகாரத்தில் டிரம்ப் இறுதி முடிவை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய கிழக்கு நோக்கி ராணுவ பலத்தை அமெரிக்கா அதிகரித்து வருவது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications