Doomsday போருக்கு ரெடியாகும் ஈரான்.. அமெரிக்காவுடன் போர் வெடித்தால் பேரழிவு நிச்சயம்.. பகீர் தகவல்
தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவுக்கு எதிராகப் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு டூம்ஸ்டே போருக்கு ஈரான் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில காலமாகவே கொந்தளிப்பான சூழலே நிலவுகிறது. அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு அமெரிக்கா பிரஷர் போட்டு வருகிறது. இதில் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடக்கும் அதேநேரம் மற்றொரு பக்கம் போர்ச் சூழலும் உருவாகியுள்ளது. இதற்காக ஈரானுக்கு அருகே அமெரிக்கா தனது போர்க்கப்பல்களைக் குவித்து வருகிறது.

போர் வெடிக்கும்
இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம். டிரம்ப் இது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பார் என சொல்லப்படுகிறது. இந்த வீக் எண்டில் ஈரான் மீது அமெரிக்கா விரிவான ராணுவத் தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே போர் வெடித்தால் என்ன நடக்கும் என்பது தொடர்பாக வல்லுநர்கள் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
ராணுவ ரீதியாக அமெரிக்கா தான் பலம் வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதேநேரம் போர் ஏற்படும்போது, ஈரான் தாக்குதலால் அமெரிக்கப் படைகளுக்கும் இழப்புகள் நிச்சயம் ஏற்படவே போகிறது. மேலும், ஒரு முறைப் போர் வெடித்துவிட்டால் அது விரைவாகவோ அல்லது எளிதாகவோ முடிவடையாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரே நாளில் 100+ தாக்குதல்
இது தொடர்பாக அமெரிக்க மத்தியக் கட்டளையின் முன்னாள் துணைத் தளபதி அட்மிரல் பாப் ஹார்வர்ட் கூறுகையில், "ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் நம்மிடம் இருந்த ஆயுதங்களைக் காட்டிலும் இப்போது மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவின் போர்த் திறன்களும் மேம்பட்டுள்ளது. ஒகு நாளில் 40-50 தாக்குதல்கள் என்பதில் இருந்து 100+ தாக்குதல் என்று நமது பலம் அதிகரித்துள்ளது. ஈரான் புரட்சிப் படையைக் குறிவைத்துத் தாக்குதலை நாம் ஆரம்பித்தால் சில மணி நேரங்களிலேயே முழுமையாக அழித்துவிட முடியும்" என்றார்.
இஸ்ரேலுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும், பைடன் நிர்வாக மூத்த பென்டகன் அதிகாரியுமான டேனியல் பி. ஷாபிரோவும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தினால் ஈரானில் மிக மோசமான பாதிப்பு ஏற்படும். ஆனால், போர் ஆரம்பித்தால் அது விரைவாகவோ அல்லது கிளினாகவே முடிவடையாது.. ஈரானும் கூட நிச்சயம் அமெரிக்காவுக்குச் சில குறிப்பிடத்தக்கப் பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்றார்.
டூம்ஸ்டே போர்
INSS ஆய்வாளரும், முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான பென்னி சபாட்டி, ஈரான் ஒரு "பேரழிவுப் போருக்கு" (doomsday war) தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "ஈரான் போருக்குத் தயாராகி வருகிறது, அது உண்மைதான். ஈரான் ஆட்சி பல ஆண்டுகளாக மோசமாக இருக்கிறது. அந்நாட்டு மக்களே ஈரான் ஆட்சிக்கு எதிராகவே உள்ளனர். அங்குப் போராட்டங்களும் வெடித்து வருகிறது. இதைத் திசைதிருப்ப ஈரான் போரை ஆரம்பிக்கலாம்.
ஈரானுக்கு வாய்ப்பே இல்லை
இதனால் சில சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால், அமெரிக்காவை காட்டிலும் ஈரான் வலிமையாக இல்லை. அமெரிக்கர்களின் தரம், துல்லியம் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஈரானால் ஈடுகொடுக்க முடியாது. 12 நாள் போரில் அதை நாம் கண்டோம். அவர்கள் வலிமையானவர்கள் அல்ல.. போர் வெடித்தால் ஈரானுக்கே நஷ்டம். இது அவர்களுக்கும் கூட நன்றாகவே தெரியும்" என்றார்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்!












Click it and Unblock the Notifications