ஈராக்கில் விழுந்து வெடித்த அமெரிக்க விமானம்.. வேலையை காட்டிய ஈரான்! என்ன நடக்குது?
தெஹ்ரான்: ஈரான் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானங்களுக்கு, எரிபொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த, KC-135 ரக விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து வெடித்திருக்கிறது. மற்றொரு விமானம் வால் பகுதி உடைந்த நிலையில், தரையிறக்கப்பட்டிருக்கிறது.
இந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது. இதை விபத்து என்று அமெரிக்கா சொன்னாலும், ஈரான் தாக்குதலால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கிய விமானம்
ஈரான் விஷயத்தில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. போரை தொடர வேண்டும், ஈரானில் நிலவும் அரசை வீழ்த்தி, தனக்கு ஆதரவான அரசை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். எனவே, அமெரிக்கா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதல் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.
எரிபொருள் நிரப்பும் விமானம்
அமெரிக்காவின் போர் கப்பல்களான யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ஆகியவை ஈரான் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றன. இந்த கப்பல்கள் இரண்டும் விமானம் தாங்கி போர் கப்பல்களாகும். இதில் F-15, F-16 மற்றும் F-35 ரக விமானங்கள் இருக்கின்றன. இவைதான் ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானங்கள் பல ஆயிரம் கி.மீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டவை. ஆனால், அதற்கு தேவையான எரிபொருளை நடுவானில் நிரப்ப வேண்டும்.
எப்படி நடந்தது?
இதற்காக அமெரிக்காவிடம் KC-135 ரக விமானங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான லிட்டர் எரிபொருளை சுமந்து செல்லும் இந்த விமானங்கள், நடுவானில் மற்ற போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும்.
இப்படி நேற்று மற்ற விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்தபோதுதான், KC-135 ரக விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து வெடித்திருக்கிறது. இதில் மொத்தம் 6 பேர் இருந்திருக்கின்றனர். அதில் 4 பேர் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மீதமிருக்கும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா அறிக்கை
இது குறித்து அமெரிக்கா வெளியிட்டிருந்த அறிக்கையில், சம்பவம் எதிரியின் தாக்குதல் காரணமாகவோ, அல்லது தவறு காரணமாகவோ ஏற்படவில்லை என்றும், விபத்தாக நடத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. விசாரணை முடிந்த பின்னர் உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளியிடப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரான் மீது சந்தேகம்
அமெரிக்கா சொல்வது ஒருபுறம் இருந்தாலும், இந்த விபத்துக்கு ஈரானின் தாக்குதல் கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெினல் ஈரானிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகள் இருக்கின்றன. இந்த ஏவுகணைகளில் ஏதேனும் ஒன்று KC-135 ரக விமானத்தை தாக்கியிருக்கலாம். KC-135 விமானங்கள் இன்னொரு சிறிய விமானத்திற்குதான் எரிபொருளை நிரப்பும். அப்படி இருக்கையில் எப்படி இரண்டு KC-135 ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கும்? என கேள்வி எழுகிறது.
ஈரானின் தாக்குதலை மறைக்கவே அமெரிக்கா இப்படி சமாளிக்கிறதோ? என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை














Click it and Unblock the Notifications